வட்டார வழக்கு திரைவிமர்சனம் ரேட்டிங் 3../5.

நடிகர் & நடிகைகள் :- சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன், ஈஸ்வரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- டோனி சான் – சுரேஷ் மணியன்.

படத்தொகுப்பாளர் :- வெங்கட்ராஜன்.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- கே.கந்தசாமி – கே.கணேசன்.

ரேட்டிங் :- 3./ 5.

மதுரை மாவட்டம் அருகில் சோழவந்தான் என்ற கிராமத்தில் இரண்டு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக நீ பெரியவனா நான் பெரியவனா என அவர்களுக்குள் அடிதடி வெட்டு குத்து நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் மற்றொரு எதிர் குடும்பத்தில் உள்ள விஜய் சத்யாவை வெட்டி கொன்று விடுகிறார்.

கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜனால் கொலை செய்யப்பட்ட விஜய் சத்யாவின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க முயல்கிறார்கள்.

கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் பழிவாங்கும் துடிக்கும் விஜய் சத்யாவின் குடும்பத்திலிருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? வட்டார வழக்கு திரைப்படத்தின் மீதி கதை.

இந்த வட்டார வழக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் நம்பிராஜன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பீராஜன், மிக இயல்பாக நடித்திருப்பதோடு, கடும்கோபம் மற்றும் காதலை மிக இயல்பாக கடத்தும் விதத்தில் நடிப்பின் மூலம் அசத்துகிறார்.

இந்த வட்டார வழக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக ரவீனா ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவி தொட்டச்சி என்ற கதாபாத்திரத்தில் சரியான தேர்வாக இருப்பதோடு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

கிராமத்தில் இருக்கும் கதாநாயகனின் எதிரி கதாபாத்திரத்தில் விஜய் சத்யா மிகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பர்களாக வரும் சுப்பிரமணியபுரம் விசித்திரன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் நண்பராக வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஈஸ்வர் மிகவும் அருமையாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஈஸ்வரின் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் திரைப்படத்தில் நண்பனின் இறப்புக்கு காரணமான  இருந்த குடும்பத்தை  பழிக்கு பழி வாங்கும் இறுதிக்காட்சியில் கதாநாயகனை கொன்ற விஜய் சத்யாவின் குடும்பத்தினரை குடும்பத்தோடு வைத்து எரித்து விடுகிறார்.

இந்த வட்டார வழக்கு திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானவர், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய நடிப்பு செயற்கைத்தனம் இல்லாத வாழ்வியலாக இருப்பதுதான் இந்த வட்டார வழக்கு, திரைப்படத்தின் தனி சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் கரிசல் காட்டின் வெப்பத்தையும், அந்த மண்ணின் மனிதர்களையும் வாழ்விலும் ஒளிப்பதிவின் மூலம் மிகவும் நேர்த்தியாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் காதல் பாடல்கள் மிகவும் இனிமையாக உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

அதிலும், 1987 ம் காலக்கட்டங்களில் கதை நடப்பதால், அப்போதைய ஹிட் அடித்த இசைஞானியின் பாடல்கள் காட்சியின் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

காதல் மற்றும் மோதலை மையப்படுத்தி நகரும் கதையில்,  இடம்பெறும் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் அவர்களுடைய வாழ்வியல் அதை இயல்பாக காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் – இந்த ‘வட்டார வழக்கு’ திரைப்படம் கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வியலை கூறும் எதார்த்த திரைப்படைப்பாக இருக்கிறது.