புகழ்பெற்ற பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு காலமானார்.
சென்னை 07 ஜூன் 2021
புகழ்பெற்ற பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு காலமானார்.
அவருக்கு தற்போது வயது 43.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பலியான பிரபல ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஓவியராக புகழ்பெற்ற இவர், இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
அதே திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார் ஓவியர் இளையராஜா.
ஓவியர் இளையராஜா மிக நுட்பமான, நேர்த்தியான ஓவியங்களை வரையும் அசாத்தியமான ஓவிய கலைஞர் அவர்.
இவருடைய பெண்கள் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.
பிரபல வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் இவரது ஓவியம் இடம்பெறும். எழுத்தாளர்களின் கதையோடு இவரின் ஓவியமும் சேர்ந்து கதைக்கான முழுமையை வாசகரால் உணர முடியும்.
குறிப்பாக பெண்களை மிகவும் அழகாக தத்ரூபமாக வரைவதில் மிக பெரிய வல்லவர்.
இவரது ஓவியங்களை பார்க்கும் போது ஓவியமா அல்லது புகைப்படமா என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு துல்லியமாக வரையும் திறமை கொண்டவர், அசாத்தியமான படைப்பாளி.
2003-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் இருந்து மிகுந்த கவனம் பெற்று நிறைய ரசிகர்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை, இலக்கிய உலகினை சேர்ந்த கலைஞர்கள் ஓவியர் இளைராஜா.
ஓவியர் இளையராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.











