Friday, June 18
Shadow

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் பேசிய நிறுவனம்.!

சென்னை 11 ஜூன் 2021

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி சம்பளம் பேசிய நிறுவனம்.!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

டாக்டர், அயலான், டான் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரே நிறுவனத்தின் ஜந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது.

தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினாவில் ஆரம்பித்த அவருடைய பயணம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே வரை பொறுமையாகவே சென்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கை ஒரே படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். அது வந்ததும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களின் வணிக மதிப்பு 30 கோடிகளைத் தாண்டியது.

பதினைந்து கோடிகள் வரை தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர் சம்பளம் தர முன் வந்தனர்.

இந்த நேரத்தில் மற்ற தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தனது நண்பர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை உடனடியாக ஆரம்பித்து தொடர்ந்து 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார்.

தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக வாய்ப்பு தேடி அலைந்தவர்.

நடிகர் சிவகார்த்திகேயனை மிகப்பெரிய ஸ்டாராக விளம்பர வேலைகள் பார்த்தவர்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா என்பது நடிகர் சிவகார்த்திகேயனின் நிறுவனம் என்றே பார்க்கப்பட்டது.

ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அவர்கள் தயாரித்த மூன்று திரைப்படமுமே மிக பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.

இதில் வேலைக்காரனும், சீமராஜாவும் சுமாராகப் போக பல கோடிகள் கடன் ஏற்பட்டது.

இதனையடுத்து பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அத்துடன் இன்று நேற்று நாளை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படத்தை வேறு கமிட் செய்து வைத்திருந்தனர்.

ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்தப் திரைப்படத்துக்கு இசையமைப்பதாகவும் முடிவாகியிருந்தது.

இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணை தயாரிப்பில் அயலான் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கொரோன பேரிடர் காலங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையையும் சிக்கலுக்குள்ளாக்கியது.

அவரது டாக்டர் திரைப்படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் தங்கள் தளத்தில் வெளியிட தயாராக உள்ளது.

Read Also  “ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் - அசோக் செல்வன் !

டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம்நல்ல விலைக்கு வாங்க விரும்புகின்றனர்.

ஒரே கண்டிஷன், திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையையும் தங்களுக்கே தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், சேட்டிலைட் உரிமை சன் பிக்சர்ஸிடம் உள்ளது.

இதனால் டாக்டர் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக ஜந்து திரைப்படங்களில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து திரைப்படங்களில் நடிக்க பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் இரண்டு வருடம், ஐந்து திரைப்படங்கள் என்ற புதிய கணக்குடன் நடிகர் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்ய முன் வந்திருக்கிறது.

ஐந்து திரைப்படங்களுக்கும் சேர்த்து 75 கோடிகள் சம்பளம் பேசியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ். இந்த ஐந்து திரைப்படங்களை இரு வருடங்களில் எடுத்து முடிப்பதாக காலவரையறையும் நிர்ணயித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ’அண்ணாத்த’, ’தளபதி 65’, சூர்யா 40 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த ஐந்து இயக்குனர்கள் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

கொரோனா பேரிடர் காலத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது நல்ல வாய்ப்பு. திரையரங்கு, ஓடிடி, சேட்டிலைட் என எல்லா தளங்களிலும் சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்ற வகையில் அவர்களுக்கும் மிக பெரிய லாபம்.

CLOSE
CLOSE