மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய உலக நாயகன்.
சென்னை 30 டிசம்பர் 2021
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய உலக நாயகன்.
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்த நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அங்கு நேற்று காலை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை கமல் ஹாசன் சந்தித்தபோது நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் உடனிருந்தார்.











