தனது கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை செயல்படுத்த உள்ளார் தமிழக முதல்வர்.

சென்னை 14 ஜூன் 2021

தனது கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை செயல்படுத்த உள்ளார் தமிழக முதல்வர்.

சிங்காரச் சென்னை’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும் தான்.

27 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மாநகரத்தின் மேயராக மு.க ஸ்டாலின் பதவியில் இருத்த காலக்கட்டம்.

அப்போது ​ ‘சிங்காரச் சென்னை’ என்ற அழகான திட்டத்தை சென்னை மாநகர மேயர் மு.க ஸ்டாலின்
தொடங்கினார்.

அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் அதிமுக அரசு அந்த நல்ல திட்டத்தைக் கண்டுக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் தற்போது மு.க ஸ்டாலினே தற்போது தமிழக முதல்வராக இருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சிங்கரா சென்னை 2.0 திட்டப் பணி ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

அதன்படி சென்னையை அழகுபடுத்தல், பாரம்பரியத்தை பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

இந்த நகரத்தை அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாய் பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்கள், அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பு போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.

பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!