ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.
சென்னை 14 ஜூன் 2021
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்து வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14 ஆம் தேதி முதல் திறக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியில்லை.
இவை தவிர மற்ற 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது…
“குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று நடிகர் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2021