கொம்பு வச்ச சிங்கம்டா திரை விமர்சனம் ரேட்டிங் –2.25 /5

நடிகர் நடிகைகள் – சசிகுமார், மடோனா செபஸ்டியன், சூரி, இயக்குநர் மகேந்திரன், இந்தர் குமார், ஹரிஷ் பேராடி, துளசி, தீபா ராமானுஜம், மருது லீலா பாட்டி, ராகவ் விஜய், அபி சரவணன், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலிமுருகன், ஸ்ரீபிரியங்கா, சஞ்சனா நாச்சியார்,
மற்றும் பலர்.

இயக்கம் – எஸ்.ஆர் பிரபாகரன்.

ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம்.

படத்தொகுப்பு – டான் போஸ்கோ.

இசை – திபு நினன் தாமஸ்.

தயாரிப்பு – ரெதான் த சினிமா பியூப்புள்.

ரேட்டிங் –2.25 /5

தமிழ் திரைப்பட உலகில் கிராமத்துக் கதைகளின் மீதான எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும்போல.

ஒரே விதமான கதைகளை திரைப்படங்களாக எடுக்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.

நடிகர் இயக்குனர் சசிகுமார் வைத்து பத்து வருடங்களுக்கு முன்பு
‘சுந்தரபாண்டியன்’ என்ற ரசிக்கத்தக்க கிராமத்துத் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள திரைப்படம்தான் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம்.

இந்த
கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் சாதிப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் இருக்கிறார். இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்.

கரூர் மாவட்டத்தில் அருகில் உள்ள ஊரில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார் இயக்குனர் மகேந்திரன்.

இவருடைய ஒரே ஒரு மகன் கதாநாயகன் சசிகுமார் சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரை மாற்ற நினைக்கிறார்.

இதனால் ஊருக்குள் இருக்கும் சில பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது.

கதாநாயகன் சசிகுமார் சிறு வயதிலிருந்தே சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் பழகுபவர்.

அவருடைய நட்பு வட்டமும் அப்படித்தான் இருக்கிறது.

ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது வருங்கால மாமனார் வெற்றி பெற அவர் ஆதரவு தெரிவித்ததால் அவருடைய நட்பு வட்டாரமும் பிரிகிறது.

இந்நிலையில் ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் ஊரில் கோஷ்டிகள் மோதுகின்றன.

தேர்தலுக்குப் பின் நடக்கும் தகராறில் அவரது வேற்று சாதி நண்பன் கொல்லப்படுகிறார்.

அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது.

இந்தக் கொலை வழக்கில் கதாநாயகன் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள்.

நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.

பின்னர் அவர்கள் வெளியில் வந்தாலும், பழி வாங்கும் செயலாக கதாநாயகன் சசிகுமாரின் முஸ்லிம் நண்பர் கொல்லப்படுகிறார்.

அடுத்து கொலைகள் நிகழும் முன் அதைத் தடுக்க முயற்சிக்கிறார் கதாநாயகன் சசிகுமார்.

இறுதியில் இந்த சாதி பிரச்சனைகளை கதாநாயகன் சசிகுமார் எப்படி சமாளித்தாரா? இல்லையா ? கொலையானது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதுதான் இந்த கொம்பு வச்ச சிங்கம்டா
திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து இருக்கிறார்.

காதல் காட்சிகளில் செயற்கையான நடிப்பு தெரிகிறது.

கதாநாயகன் சசிகுமாருக்கென்றே உருவாக்கப்பட்ட கதை, கதாபாத்திரம் என திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது.

அவரும் அதற்குள் பர்பெக்ட்டாக உட்கார்ந்து விடுகிறார்.

இருந்தாலும் இன்னும் எத்தனை திரைப்படத்தில்தான் இப்படியே நடித்துக் கொண்டிருப்பார் என்ற கேள்வியும் வருகிறது.

கொஞ்சம் மாத்தி யோசிங்க கதாநாயகன் சசிகுமார்.

கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன்.

நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியனுக்கு திரைப்படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.

பாடல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார்.

கதாநாயகன் சசிகுமாரும் இவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் கூட மிக மிகக் குறைவுதான்.

கதாநாயகன் சசிகுமாரின் அன்பான தந்தையாக மறைந்த இயக்குனர் மகேந்திரன்.

அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மகேந்திரன்.

கதாநாயகன் சசிகுமாருடன் எப்போதுமே இருக்கும் நண்பனாக சூரி.

சூரியின் காமெடி பெரியதாக எடுபடவில்லை.

இந்தர் குமார், ஹரீஷ் பெராடி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது.

ஹரிஷ் பெரடி, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார் இருவருக்குமிடையேதான் தேர்தல் போட்டி, சண்டை என நடக்க, இவர்கள்தான் மெயின் வில்லன் என நாம் நினைத்தால் அதில் கிளைமாக்சில்தான் மெயின் டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்.

கதாநாயகன் சசிகுமாரின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து போகும் நடிகர்கள், நடிகைகள் என ஒரு மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது.

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

கமர்ஷியல் திரைப்படத்திற்கு உண்டான அம்சங்களை கொண்டு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

திபு நினன் தாமஸ் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் கேட்க வைக்கிறது.

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

கிராமத்து திரைப்படம் என்றாலே சில ஒளிப்பதிவாளர்கள் தனி கவனத்துடன் படமாக்குவார்கள்.

அதில் அனுபவசாலியான என்.கே ஏகாம்பரம் கதைக்குள்ளேயே காட்சிப் பதிவை அமைத்திருக்கிறார்.

என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

ஆனாலும், பல காட்சிகள் சாதிப் பெருமை பேசுகிறது.

சாதிப் பெருமையைச் சொல்லி சாதி வேண்டாம் என்கிறார்கள்.

மொத்தத்தில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் கொம்பை சிவியும கூர்மை குறைவுதான்.

error: Content is protected !!