தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன் கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க பிரபல ஊடகத்திற்கு நடிகர் காளி வெங்கட் அட்வைஸ்
சென்னை 27 மே 2021
தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன் கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க பிரபல ஊடகத்திற்கு நடிகர் காளி வெங்கட் அட்வைஸ்
தளபதி விஜய்யுடன் தெறி, தனுஷுடன் மாரி, கொடி, சிம்புவுடன் ஈஸ்வரன், சூர்யாவுடன் சூரரைப்போற்று, ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் காளி வெங்கட்.
45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் காளி வெங்கட்..
இவருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்…
“இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.
இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தன. ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.
சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை.
டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன்.
கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க”
என வீடியோ பதிவிட்டுள்ளார் நடிகர் காளி வெங்கட்.
இதை ஒரு ஊடகம் பகீர் பரபரப்பு தகவல் என செய்தியாக வெளியிட்டது.
அதை பார்த்த நடிகர் காளி வெங்கட் தன் ட்விட்டரில் இதை கண்டித்துள்ளார்.
இதோ அந்த பதிவு..
1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான்
https://twitter.com/kaaliactor/status/1397398754286657537?s=19
#COVIDEmergencyIndia #experience pic.twitter.com/GIDWnUxInB
— Kaali Venkat (@kaaliactor) May 25, 2021











