இரவில் நிழல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5.
நடிகர் நடிகைகள் :- ஆர். பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர்,
பிரிகிடா சகா, சந்துரு, ஆனந்த கிருஷ்ணன், சினேகா குமார், சாய் பிரியங்கா ரூத், மற்றும் பலர்.
இயக்கம் :- இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
ஒளிப்பதிவு :- ஆர்தர் A. வில்சன்.
படத்தொகுப்பு :- ஆர்.பார்த்திபன்
இசை :- ஏ ஆர் ரஹ்மான்.
தயாரிப்பு :- பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.
ரேட்டிங் :- 4.25 / 5.
தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான இயக்குனர் என்றால் ஆர். பார்த்திபனை மட்டுமே சொல்ல முடியும்.
ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வித்தியாசமான திரைப்படத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறித்தனம்.
உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்தப் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் யாராலும் கொடுக்க முடியாத ஒரு திரைப்படத்தை கொடுத்த
இயக்குனர் பார்த்திபனின் முயற்சிக்கு முதல் பாராட்டுக்கள்.
அதாவது இந்த திரைப்படத்தில் கேமரா ஆன் செய்தால் பின்பு முழு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக எடுத்து முடித்த பின்புதான் கேமரா ஆப் செய்யப்படும்.
இந்தப் படப்பிடிப்பின் போது இடையில் எவர் ஒருவர் தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் முதலில் இருந்து திரைப்படமாக்க வேண்டும்.
அப்படி 22 முறை முயற்சிக்கப்பட்டு 23வது முறையாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம்தான் இநத இரவின் நிழல்.
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக புதிய முயற்சியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் இதை செய்ததற்கு இயக்குனர் ஆர். பார்த்திபனை கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக இப்படி ஒரு முயற்சியைச் செய்ய துணிந்தவர் கூடவே நல்லதொரு கதையையும் யோசித்திருந்தால் இன்னும் பெரிய அளவில் சாதனையை படைத்திருக்கலாம்.
ஒரு காவல்துறை அதிகாரியால்
சிறு வயதில் பாலியல் ரீதியாக பிரச்சினையை அனுபவித்து திருட்டு வேலை செய்து பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று, திரும்பி இளமைப் பருவம் எட்டியதும் காதலில் விழுகிறார் கதாநாயகன் பார்த்திபன்.
உயிருக்கு உயிராய் காதலித்த பெண் ஒருவர் துரோகம் செய்து வேறு ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்.
காதலன் கதாநாயகன் பார்த்திபன் பார்த்து விட அதற்கு அந்தப் பெண் சொல்லும் காரணம் பணம்தான்.
அதன்பின் ஆந்திராவுக்குச் செல்ல அங்கு ஒரு கதாநாயகி பிரிகிடா சகாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, கடன் கொடுத்த பைனான்சியர் கதாநாயகன் பார்த்திபனின் கர்ப்பிணி மனைவி கதாநாயகி பிரிகிடா சகாவை நிர்வாணப்படுத்தி விடுகிறார்கள்.
கதாநாயகி பிரிகிடா சகா
தனக்கு நடந்த கொடுமை தாளாமல் பார்த்திபனின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
ஒரு ஆசிரமத்தில் சேரும் கதாநாயகன் பார்த்திபன் நகைகளைக் கொள்ளையடித்து மிக பெரிய சினிமா பைனான்சியராகிறார்.
சினிமா ஃபைனான்சியராக இருக்கும் கதாநாயகன் பார்த்திபன் தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் பார்த்திபனிடம் திரைப்படம் எடுப்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கும் தயாரிப்பாளர் சில சிக்கல்களால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழல் ஏற்பட அவர் தற்கோலை செய்துக் கொள்கிறார்.
இறந்த தயாரிப்பாளரின் தற்கொலைக்கு கதாநாயகன் பார்த்திபன் தான் காரணம் என நினைத்து கதாநாயகன் பார்த்திபனின் மனைவி மற்றும் குழந்தையும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இதனிடையே கதாநாயகன் பார்த்திபனை கைது செய்ய காவல்துறை துரத்துகிறது.
தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்து வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்த சூழலில் பாழடைந்த ஆசிரமம் ஒன்றில் கதாநாயகன் பார்த்திபன் ஒளிந்து கொள்கிறார்
அதன் பின்னும் விதி அவரை வேறு ரூபத்தில் துரத்துகிறது.
கதாநாயகன் பார்த்திபனின் வாழ்க்கை எப்படி தொடங்கியது? இந்த சமூகம் அவருக்கு கொடுத்தது என்ன? என்பதுதான் இந்த இரவின் நிழல் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகனாக பார்த்திபன் நடித்திருக்கிறார்.
நந்து கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்
இந்த திரைப்படத்தில் நடிப்பதிலும் இயக்குவதிலும் அவர் கவனம் செலுத்தியிருப்பதால் கூடுதல் சுமையை சுமந்து திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
கதாநாயகன் பார்த்திபன் எட்டு வயது சிறுவனாகவும் இளம் வயது வாலிபனாகவும்
நடுத்தர வயது மனிதராகவும் என பல்வேறு காலகட்டத்தில் தோற்ற பொருத்தத்தோடு கூடிய நடிகர்களை நடிக்க வைத்திருகிறார்.
அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நந்துவாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களின் பணியை சிறப்பாக செய்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார்கள்.
இநத இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் சினேகா குமாரி, சகாய பிரிகிடா, சாய் பிரியங்கா ருத் ஆகியோரின் நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
கதாநாயகன் பார்த்திபனின் மனைவி சிலக்கம்மாவாக வரும் சகாய பிரிகிடா காதலி சினேகா குமார் ஆகியோர் தமிழ் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்கள்.
குறிப்பாக தெலுங்கு கலந்து தமிழ் பேசி நடித்திருக்கும் சகாய பிரிகிடா எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சொல்கிறார்.
பிரமானந்தா சாமியாராக ரோபோ சங்கரும் அவரது சிஷ்யை பிரேமகுமாரியாக வரலட்சுமி சரத்குமாரும் நிகழ்காலத்தை பிரதிபலிக்கின்றனர்.
ரோபோ சங்கர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்,
வரலட்சுமி சரத்குமார் கொடுத்த வேடத்தையும் வேலையையும் சரியாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்தர் வில்சன் மிக பெரிய தூணாக இருந்து இயக்குனர் பார்த்திபனின் கனவை பதிவு செய்திருக்கிறார்.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு, திரைப்படம் முடியும் வரை கிம்பல் மூலம் கேமராவை ஆபரேட் செய்த ஆகாஷ் ஆகியோரது உழைப்பு பாராட்டக் கூடியது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் விரக்தி, வெறுப்பு, துயரம் என்று கலவையாக ஒலிக்க செய்து பாவம் செய்யாதிரு மனமே பாடலில் நம்மை கரைக்கிறார்.
அந்த சித்தர் பாடல் கேட்க கேட்ட என்னவோ செய்கிறது.
ஏஆர் ரகுமானின் பின்னணி இசை இந்த திரைப்படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
கதையில் மட்டும் கொஞ்சம் மாற்றம் இருந்திருந்தால் ‘இரவின் நிழல்’ இன்னும் இனிமையான நிழலாக அமைந்திருக்கும்.
இந்த சிற்சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த ‘ஒரே ஷாட்’ திரைப்பட முயற்சி முத்தான ஒரு முயற்சி.
இரவின் நிழல் – தமிழ் தமிழ் திரைப்பட உலகிற்கு ஒரு புதிய முயற்சி.
இந்த இரவின் நிழல் திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எங்களது மூவி விங்ஸ் இணையதளம் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.