சிவி 2 திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.

நடிகர் நடிகைகள் :- யோகி, தேஜ் சரன்ராஜ், சுவாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன், மற்றும் பலர்.

இயக்கம் :- கே.ஆர்.செந்தில் நாதன்.

ஒளிப்பதிவு :- பி.எல்.சஞ்சய்.

படத்தொகுப்பு :- எஸ்.பி.அஹமது.

இசை :- எஃப்.எஸ்.ஃபைசல்.

தயாரிப்பு :- துளசி சினி ஆர்ட்ஸ்.

ரேட்டிங் :- 2.5 / 5.

 

15 வருடங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி.

2007ஆம் வருடம் வெளியான திகிலின் உச்சம் தொட்டு சக்கைபோடு போட்ட திரைப்படம்தான் “சிவி”.

அதைத்தொடர்ந்து 15 வருடங்கள் கழித்து மீண்டும் சிவி 2 திரைப்படத்தை
கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கியுள்ளார்.

ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் சிவி இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

2007ஆம் வருடம் வெளிவந்த “சிவி” திரைப்ப்படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி 2” திரைப்படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த மருத்துவமனையிலுள்ள அமானுஷ்யத்தையும் சில கல்லூரி மாணவர்கள் தைரியமாக சென்று மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள்.

அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அதிகப்படுத்தி விடுகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் சிவி முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரம் “நந்தினி”.

அந்த நந்தினி சாவுக்கு காரணமானவர்களை முதல் பாகத்திலே பழி வாங்கிய நந்தினி தற்போது வந்திருக்கும் கல்லூரி மாணவர்களை என்ன செய்தார்.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்த மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, காவல்துறையினர் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவமனைக்கு தேடிச் செல்கிறார்கள்.

அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர்.

அந்த மருத்துவமனைக்குள் சென்ற கல்லூரி மாணவர்கள் என்ன ஆனார்கள் காவல்துறையினர் கிடைத்த ஆதாரங்களை வைத்து கல்லூரி மாணவர்களை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
நந்தினி அந்தக் கல்லூரி மாணவர்களை என்ன செய்தார்? என்பது தான் இந்த சிவி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

தமிழ் திரைப்பட உலகில் இது வரை நம் கண்டிராத மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் சாம்ஸ்.

நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Read Also  ஐரா விமர்சனம்

காட்சிக்கு தேவையான உடல் மொழியை கொண்டு நடித்தது கூடுதல் பலம்.

கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் திரைப்படம் பார்க்கும் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள்.

கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து சீக்குவல் திரைப்படம் இயக்க நினைத்த இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதனின்
பாராட்டியாக வேண்டும்.

இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதனின் கதை தேர்வு சரியான தேர்வு.

மேலும், தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் “கோ ப்ரோ” கேமராவை வைத்து மட்டும் இயக்கிவிட்டு.

மீதி திரைப்படத்தை 2007ஆம் வருடம் வெளியான சிவி படத்தின் எஃபெக்ட்களை பயன்படுத்தியது சீக்குவல் திரைப்படத்திற்கு தேவையான ஒன்று என்பதை இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதன் அறிந்துள்ளார்.

பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் நம்மை மிரட்டியது.

அவரின் கேமரா கோணம் அனைத்தும் திகில் திரைப்படம் என்ற அச்சத்தில் நம்மை வைத்திருக்கும்.

எஃப்.எஸ்.ஃபைசல் இசை மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் சீக்குவல் திரைப்படமாக வெளியாகும் பேய் திரைப்படங்களின் மத்தியில் “சிவி-2” தனித்துவமான ஒரு இடத்தையே பெற்றுள்ளது.

பேய் திரைப்படம்தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கடந்து செல்லும் எத்தனையோ திரைப்படங்கள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் வர்த்தக ரீதியாகவும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாகவும் மக்கள் பாராட்டுகளை பெற்று வெற்றி பெறுவது என்பது கடினமாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் கடும் உழைப்புடன் பயத்தை மட்டும் மையமாக வைத்துக் கொள்ளாமல் மிகவும் அழுத்தமான ஒரு கதையை இந்த திரைப்படம் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்ப்பதற்கு சரியான தேர்வு இந்த “சிவி-2”.