குலு குலு திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75/5

நடிகர் நடிகைகள் :-  சந்தானம், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்த்ரா, ப்ரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ சுந்தரம், மௌரிஷ், யுவராஜ், TSR, முருக்கனி, தர்ஷன், சேசு, மகாநதி சங்கர், லொல்லுசபா மாறன், மற்றும் பலர்.

இயக்கம் :- ரத்னகுமார்.

ஒளிப்பதிவு :- விஜய் கார்த்திக் கண்ணன்.

படத்தொகுப்பு :- பிலோமின் ராஜ்.

இசை :- சந்தோஷ் நாராயணன்.

தயாரிப்பு :- சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்.

ரேட்டிங் :- 3.75 / 5.

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான கதைகளை மாறுபட்ட திரைக்கதைகளை இதுவரை வெளிவராத வித்தியாசமான திரை கதைகளாக தங்களது திரைப்படங்களில் இருக்க வேண்டும் என சில இயக்குனர்கள் தங்களது திரைப்படங்களை இயக்குகிறார்கள்.

நடிகர் சந்தானம் திரைப்படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத திரைப்படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் சந்தானத்தின் ரசிகர்களை இந்த குலு குலு திரைப்படம் திருப்திப்படுத்துமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படி நகைச்சுவையை எதிர்பார்க்காமல் வரும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த குலு குலு திரைப்படம் திருப்தியை கொடுக்கலாம்.

இந்த குலு குலு திரைப்படத்தை பொறுத்தவரையில் வித்தியாசமான கதை மாறுபட்ட ஒரு திரைப்படமாகத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்.

அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கதாநாயகன் சந்தானம்.

கதாநாயகன் சந்தனம் சிறு வயதில் பழங்குடி மக்களை சிலர் துன்புறுத்தி அழைத்துச் செல்லும் போது அதில் சிறு வயது சந்தானமும் தப்பித்து விடுகிறார்.

கதாநாயகன் சந்தானத்திற்கு 13 மொழிகள் தெரிந்தவர்.

பல மொழிகளைப் பேசும் திறமை கொண்ட கதாநாயகன் சந்தானத்திற்கு தமிழும் தமிழ் நாடும் பிடித்துப் போவதால் சென்னையில் தங்கிவிடுகிறார்.

நாடு நாடாக சுற்றி திரிந்து கடைசியில் ஒரு பாலத்துக்கு அடியில் வந்து வசிக்கிறார்.

அனைத்தும் அறிந்தவர் என்பதால் கதாநாயகன் சந்தானத்தை google என்று அழைக்கினர்.

கூகுள் என அழைக்கப்படும் கதாநாயகன் சந்தானம் யார் உதவி கேட்டாலும் ஓடோடி வந்து உடனடியாக உதவி செய்வார்.

ஒரு கட்டத்தில் அதுவே மறுவி குலு பாய் என்கின்றனர்.

கதாநாயகன் சந்தானம் ஒரு நாடோடி என்பதால் யார் எந்த உதவி கேட்டாலும் உடனே சற்றும் தாமதிக்காமல் உதவி செய்து வருபவர்.

ஒரு கட்டத்தில் காவல்துறை ஆய்வாளரை ஒரு பிச்சைக்காரியை அவமானப்படுத்தியதால் அந்த பிச்சைக்காரி கதாநாயகன் சந்தானத்திடம் உதவி கேட்டதால் அந்த காவல்துறை ஆய்வாளரை நடுரோட்டில் வைத்து அடிக்கிறார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த முன்று இளைஞர்கள் எங்களது நண்பரை ஒருவர் கடத்தி வைத்துக் கொண்டு எங்களை மிரட்டுகிறார்கள் என கூறுகிறார்.

Read Also  பூ சாண்டி வரான் திரை விமர்சனம் ரேட்டிங் –3.25 /5.

நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என் கேட்கின்றனர்.

அவர்களுக்கு உதவ போய் பல விதமான சிக்கல்களை சந்திக்கிறார் கதாநாயகன் சந்தானம்.

நால்வரும் இணைந்து காணாமல் போனவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.

ஆனாலும் அந்த நண்பனை மீட்கும் போராட்டத்தில் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்தப் பயணத்தில் காணாமல் போனவரின் காதலியும் இணைகிறார்.

இடையில் சில பல கிளைக் கதைகளும் திரைப்படத்தில் வந்து செல்கிறது.

காணாமல் போனவரை கதாநாயகன் சந்தானம் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த குலு குலு திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த குலு குலு திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக மிக வித்தியாசமா நடித்திருக்கிறார்.

கூகுள் என்கிற வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகன் சந்தனம் நடித்துள்ளார்.

இந்த குலு குலுதிரைப்படத்தில் சந்தானத்திற்கு இந்த திரைப்படத்தில் ஜோடியாக யாரும் இல்லை.

போகிற போக்கில் சில அரசியல் வசனங்களையும் பேசுகிறார்.

அப்படி இல்லாமல் பிளாக் காமெடி டிரை பண்ணலாம் என கதாநாயகன் சந்தானம் நடித்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

கதாநாயகன் சந்தானத்திடம் உதவி கேட்கும் மூன்று இளைஞர்களும்
புதுமுகங்களாக இருந்தாலும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

கடத்தப்பட்ட இளைஞராக நடித்திருக்கும் ஹரிஷ் குமார் அருமையாக நடித்திருக்கிறார்.

அவரது காதலியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி, நடிப்பு அருமை.

வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணாக அதுல்யா சந்திரா நடிப்பு சூப்பர்.

ஒரு பள்ளியில் படிக்கும் மாணவியை கற்பழிக்க நினைக்கும் இரண்டு இளைஞர்களிடம் இருந்து இந்த பள்ளி மாணவி காப்பாற்றும் காட்சி மனதை உருக வைத்துள்ளார் அதுல்யா சந்திரா.

வில்லனாக வரும் பிரதீப் ராவத். இறந்து போன தனது அப்பாவின் கௌரவத்திற்காக தஙகை அதுல்யா சந்திராவைக் கொல்லத் துடிக்கும் ஒரு கொடூரமான அண்ணனாக பெரிய ஆளு நடித்திருக்கிறார்.

ஒரு டான் போல இருக்கும் பிரதீப் ராவத வில்லனாக மிரட்டி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இம்மாதிரியான பிளாக் காமெடி திரைப்படங்களுக்கென தனியாக பின்னணி இசை கொடுத்திருக்கிறார்..

இந்த திரைப்படத்திலும் அப்படியே. ‘அன்பரே’ பாடல் தனியாக ரசிகர்கள் மனதில் பதிகிறது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒலிப்பதிவு திரைப்படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு பலம்.

கதாநாயகன் சந்தானத்தை இப்படி எல்லாம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ரத்ன குமார் முடிவு செய்ததற்கு தனி தைரியம் கண்டிப்பாக வேண்டும்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம்தான் பொருத்தமாகத்தான் இருப்பார் என இயக்குனர் ரத்ன குமார் நடிக்க வைத்திருக்கிறார்.

அதே சமயம் திரைப்படத்தில் பல இடங்களில் நகைச்சுவைக்காக காட்சிகள் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் கடந்து போகிறார்கள்.

Read Also  யாரோ திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5/5

மொத்தத்தில் குலு குலு திரைப்படம் கொஞ்சம் ஜில்லு, கொஞ்சமான லொள்ளு.