இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர் கமல்ஹாசன் வாழ்த்து.

சென்னை 03 ஜூன் 2021

இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர் கமல்ஹாசன் வாழ்த்து.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா  தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார்.

02 / ஜூன் /1943 இல் தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்தவர் இவரது இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும்அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1960களில் பல மேடை நாடகங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தனது தம்பிகளுடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என இசை குழுவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளனர்.

இவரது 33 ஆவது வயதில் “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் இயக்குநர் பஞ்சுஅருணாச்சலம் இவரை இளையராஜா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார்.

இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவருக்கு “இசைஞானி“ என்ற பட்டத்தை வழங்கினார்.

இந்திய அரசின் தேசிய விருதினை 1985-சாகர சங்கமம் (தெலுங்கு), 1987- சிந்து பைரவி (தமிழ்), 1989- ருத்ர வீணை (தெலுங்கு), 2009- பழஸிராஜா (மலையாளம்), 2016- தாரை தப்பட்டை (தமிழ்) போன்ற திரைப்படங்களுக்காக 5 முறை பெற்றுள்ளார்.

இசைஞானிக்கு அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்னணி பாடகி சித்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் சித்ரா பாடிய பாடலை பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

( “கிழக்கு வாசல்” திரைப்படத்திலிருந்து வந்ததே ஓ..குங்குமம்.. என்ற பாடலைப் பாடி வீடியோவாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.)

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர்.

பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

https://twitter.com/KSChithra/status/1399885977439637509?s=19

error: Content is protected !!