இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் !
இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் !
சென்னை 02 மே 2024 ராக்கதன், மேதகு படங்களுக்கு இசையமைத்த பிரவீண்குமார் இன்று காலை 6:30 மணியளவில் உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.
தற்போது அவருடைய வயது 28.
மிகச் சிறந்த இசையை வழங்கி வளர்ந்து வந்த இசையமைப்பாளர் பிரவீண்குமார் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
அவரது இறுதி ஊர்வலம் இன்று 02:05: 2024 மாலை 6 மணியளவில் வடக்கு வாசல் அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது.











