பிரபல தமிழ் நடிகர் மரணம்!! திரையுலகினர் அஞ்சலி!!
சென்னை 24 டிசம்பர் 2022 பிரபல தமிழ் நடிகர் மரணம்!! திரையுலகினர் அஞ்சலி!!
வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.
அவர் 50 வயதாகும் இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழில் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல் குறிப்பிடத்தக்கது.
இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது உடலுக்கு இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.