நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- லீலா, குமரவேல், விசாலினி, அனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்ஃபான், வில்ஸ்பேட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குஹன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத், பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ், தங்கதுரை, வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா. எம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அனந்த்.
ஒளிப்பதிவாளர் :- தமிழ் செல்வன்.
படத்தொகுப்பாளர் :- ஃபென்னி ஆலிவர்.
இசையமைப்பாளர் :- ஆ காஷிஃப்.
தயாரிப்பு நிறுவனம் :- மசாலா பாப்கார்ன் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்கள் :- ஐஸ்வர்யா. எம் & சுதா.ஆர்.
ரேட்டிங் :- 2.5/5.
Nanban Oruvan Vantha Piragu
கதாநாயகன் ஆனந்த் மற்றும் அம்மா அப்பா ஆனந்தம் காலனியில் சிறு வயதில் புதியதாக குடிவந்து வசித்து வருகிறார்.
அந்த காலனியில் வசிக்கும் மற்ற சிறுவர்கள் அனைவரும் நண்பர்களாக ஒரே கேங்காக காலணியில் வசித்து வருகிறார்கள்.
கதாநாயகன் ஆனந்துக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய ஒரு நடிகனாக வேண்டும் என்பதே கனவு ஆனால் பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்.
சிறு வயதில் ஒன்றாக இருந்த கேங்கில் இருந்த நண்பர்கள் வளர்ந்த பின்பு வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து பின்பு பல்வேறு இடங்களில் வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள்.
அதன் பின் ஒரு கட்டத்தில் கதாநாயகன் ஆனந்த் ஏன் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொழிலை செய்யக்கூடாது என NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட் புதியதாக ஒரு ஈவண்ட்
கம்பெனியை தொடங்குகிறார்கள்.
சிட்டியில் உள்ள மற்ற ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனியை விட அவர்களது கம்பெனி வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகன் ஆனந்த கண்டுபிடித்த Become a Star என்ற மொபைல் ஆப் மூலம் வித்தியாசமான ஒரு டிரெண்டை பின்பற்றுகிறார்.
அதன் பிறகு ஒன்று இரண்டு ஈவண்ட் எடுத்தப்பின் இவர்கள் நினைத்தது போன்ற
அமையாததால், இதனால் நண்பர்களுக்கு இடையே மிகப்பெரிய அளவில் பிரச்சினை உருவாகிறது.
நண்பர்கள் அனைவருக்கும் சேர்ந்து துவங்கப்பட்ட இந்த NOVP ஈவண்ட் மேனேஜ்மண்ட் கம்பெனி வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா? இதனால் என்னென்ன பிரச்சனையை சந்தித்தார்கள்? மீண்டும் நண்பர்கள் இணைந்தார்களா? இணையவில்லையா?
என்பதுதான் இந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு
திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்தில் கதாநாயகனாக ஆனந்த் நடித்திருக்கிறார்.
இந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்தில் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.
கதாநாயகன் ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் நடிப்பாக இல்லாமல் இயல்பாக பயணிக்க வேண்டும் என் சிரமப்பட்டு நடித்திருப்பது போல் தெரிகிறது.
கதாநாயகன் ஆனந்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரவேல், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷாலினி, பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குல்லபுலி லீலா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பை கொடுத்து தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன், ஒளிப்பதிவு மூலம் மிகச் சிறப்பாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
நண்பர்களையும், நட்பையும் களமாக கொண்டு காதல், பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் புரிதல், நகைச்சுவை ஆகியவற்றை சேர்த்து ஒரு ஜாலியான கமர்ஷியல் திரைப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
அவருடைய வாழ்க்கையில் பார்த்த அனைத்து திரைப்படங்களில் உள்ள பாதிக்கப்பட்டு திரைக்கதை எழுதுவது தவறில்லை என்றாலும், அதை சுவாரஸ்யமாகவும், இளைஞர்களுக்கு ஏற்றபடியும் சொல்லாமல் இயக்குநர் ஆனந்தின் திரைப்படத்தை சொதப்பி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் அரைத்த மாவை அரைத்து இருக்கிறார்.











