டியர் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜீ. வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோஹினி, தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட், அப்துல் லீ, J. கமலேஷ், நந்தினி, கீதா கைலாசம், மகாலக்ஷ்மி சுதர்சனன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆனந்த் ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- ஜெகதீஷ் சுந்தர மூர்த்தி‌.

படத்தொகுப்பாளர் :- ருக்கேஷ்.

இசையமைப்பாளர் :- ஜீ.வி. பிரகாஷ்,குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- நர்த்திங் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- வருண் திரிபுரானெனி, அபிஷேக் ராமிஷெட்டி, G.பிருத்வி ராஜ்,

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறிய தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து கொண்டு அம்மா அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் எண்ணம் முழுவதும் ஒரு பெரிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார்.

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அவர் அசந்து தூங்கும் சமயத்தில் ஒரு சிறிய சத்தம்  கேட்டால் கூட எழுந்து விடுவார்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு குன்னூரில் தனது அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறார்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் சாதாரணமாக தூங்கினாலே அவருடைய தூக்கத்தில் மிக அதிகளவில் சத்தத்துடன் குறட்டை விடும் பழக்கம் சிறு வயது முதல் இருந்து வருகிறது.

இந்த குறட்டை விடும் பழக்கம் இருப்பதால் பல முறை திருமணத்திற்கு பல மாப்பிள்ளை பார்த்தும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்  குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது என உண்மையை கூறுவதால் பல முறை பெண் பார்ப்பதோடு நின்று போகிறது.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாருக்கும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் குறட்டை விடும் பழக்கத்தை மறைத்து திருமணத்தை நடத்தி விடுகிறார்கள்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் நினைத்தது போல் பெரிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை கிடைக்கிறது.

அதன் பின் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷு இருவரின் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறட்டையால் மிகப்பெரிய அளவில் பிரச்சனை உருவாகிறது.

மேலும் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு மிகப்பெரிய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கான வேலையும் பறிபோகும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது.

கதாநாயகன் ஐஸ்வர்யா ராஜேஷிடம் உன்னால் தான் எனக்கு அந்த கம்பெனியில் வேலை பறிபோனது என கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் விவாகரத்து கேட்கிறார்.

ஆனால், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து தர மறுத்து விடுகிறார்.

இறுதியில் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? பெறவில்லையா?இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? சேர்ந்து வாழவில்லையா? என்பதுதான் இந்த டியர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டியர் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி.வி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

இந்த டியர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அருமையான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

வாரம் வாரம் ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு வரும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ குமார் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு விதமான நடிப்பை கொடுத்து ஒவ்வொரு திரைப்படத்திலும் பலவிதமான நடிப்பில் வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

இந்த டியர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்தியாசம் காண்பித்து நடித்திருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

தன் குறட்டை பிரச்சனையை தீர்க்க பல்வேறு முயற்சி செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட்டின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் சகோதரர் காளி வெங்கட்டின் மனைவியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் ஷீப் நந்தினி அவருடைய நடிப்பின் மூலம் கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் அம்மா கதாபாத் நடித்திருக்கும் ரோகிணி, தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையாக நடித்திருக்கும் இளவரசு, அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் ஆகியோர் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

ஊட்டியின் அழகை அழகாக திரைப்படம் பிடித்து பாடல்கள் அனைத்தையும் கலர்ஃபுல்லாக ஒளிப்பதிவு மூலம் காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் படியாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின்பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் 2023 ஆம் ஆண்டு குட் நைட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதேபோல் அந்த குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு குறட்டை வரும் ஆனால் இந்த டியர் திரைப்படத்தில் கதாநாயகிக்கு குறட்டை வரும் குறட்டை சத்தத்தை மையமாக வைத்து கதையை யோசித்த இயக்குனர் திரை கதையை வேறு விதமாக யோசித்து இருந்தால் இந்த டியர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும்.

இந்த டியர் திரைப்படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றுவிட்ட இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் அதை முடிக்க முடியாமல் திரைக்கதை வேறு விதமாக எங்கையோ சென்ற உணர்வை கொடுத்து இருக்கிறார்.

மொத்தத்தில் – இந்த டியர் திரைப்படம் ஏற்கனவே வந்த குட் நைட் 2 திரைப்படம் போல் இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.

ரேட்டிங் :- 2.75./5.

error: Content is protected !!