“நறுவீ” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஹரிஸ் அழகன், வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, கேத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா, சாரதா நந்தகோபால் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுபாரக் முபாரக்.
ஒளிப்பதிவாளர் :- ஆனந்த் ராஜேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- சர்பார்க் எம்.
இசையமைப்பாளர் :- அஸ்வந்த்.
தயாரிப்பு நிறுவனம் :- ஹரிஷ் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- ஏ.அழகு பாண்டியன்.
ரேட்டிங் 2.5./5.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் ஒன்றை ஒட்டியிருக்கும் அடர்ந்த காடு பகுதிக்குள் தப்பித் தவறி ஆண்கள் உள்ளே நுழைந்து விட்டால் உயிருடன் திரும்ப மாட்டார்கள்’ என்று அந்தக் காட்டின் அருகில் வசிக்கும் மக்கள் மலையேற்றம் செய்ய வருபவர்களை எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில் அடர்ந்த காடு பகுதிக்குள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, காதல் ஜோடியான ஹரிஸ் அழகன், வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள்.
அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற அவர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது.
அதே நேரத்தில், அந்த குழுவினர் தங்களை அறியாமலேயே ஆண்களுக்கு ஆபத்து விளைக்கும் வனப்பகுதிக்குள் நுழைந்து விடும் அவர்களுக்கு இந்தக் குழுவில் உள்ள ஆண்களுக்கு என்ன நடந்தது அவர்கள் அந்த அடர்ந்த காட்டு பகுதிக்குள் வந்த பணியை முடித்தார்களா? முடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘நறுவீ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நறுவீ திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஸ் அழகன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஸ் அழகன், புதுமுகம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் அளவாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறார்.
இந்த நறுவீ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக வி ஜே பப்பு நடித்துள்ளார்.மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விஜே பப்பு காமெடியாகவும் தனது காதலிடம் பயப்படும் காட்சிகளில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் முயற்சித்திருக்கிறார்.
பாடினி குமார், வின்ஸ், ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன், அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடக்கும் ஆபத்தையும், அதன் அழகையும் திரைப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் மிகவும் அருமையான இசையை கொடுத்து அசத்தியிருக்கிறார்.பழங்குடியின மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு மனிதருக்கு கிடைக்ககூடிய சராசரி வாழ்க்கையும் படிப்பும் கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குகர் இயக்குநர் சுபராக் முபாரக்.
மொத்தத்தில், ‘நறுவீ’ திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.











