’பெருசு’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா, சந்தினி தமிழரசன், கார்த்திகேயன், பாலா சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், கருணகரன், சுவாமிநாதன், தனம், தீபா சங்கர், கஜாராஜ், அலெக்சிஸ், சுப்த்ரா ராபர்ட், டீனேஜ் பையன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- இளங்கோ ராம்.
ஒளிப்பதிவாளர் :- சத்திய திலகன்.
படத்தொகுப்பாளர் :- சூரியா குமரகுரு.
இசையமைப்பாளர் :- அருண் ராஜ். சுந்தரமூர்த்தி.கே. எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- கார்த்திகேயன்.
ரேட்டிங் :- 3.5./5.
ஊருக்குள் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கதாநாயகன் வைபவ் மற்றும் சுனில் ரெட்டி உடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் பெருசு மற்றும் நண்பர்கள் சுவாமிநாதன் கிராமத்தில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பெருசு திடீரென்று இறந்து விடுகிறார்.
ஆனால், தன் தந்தை பெருசு இறந்ததை துக்கம் விசாரிக்க வரும் அனைவரிடமும் காட்ட முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கதாநாயகன் வைபவ் மற்றும் சுனில் ரெட்டி இரண்டு மகன்களும் இறந்த தந்தையின் சடலத்தை யாரிடமும் காண்பிக்க முடியாமல் மறைக்கிறார்கள்.
இறந்த தன் தந்தையின் சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் பெருசு குடும்பத்தார், எப்படி எல்லாம் அடக்க வேண்டியதை அடக்கி நடக்கும் பிரச்சனையை சமாளித்து பெருசுக்கு இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதுதான் இந்த ‘பெருசு’ திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த பெருசு திரைப்படத்தில் கதாநாயகனாக வைபவ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் வைபவ் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளிலும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் கனகச்சிதமாக காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருந்தாலும், சில காட்சிகளில் செயற்கைத்தனமாக தெரிகிறது.
பெருசாக நடித்த நடிகரின் நடிப்பு மிக சிறப்பு.
பெருசுவின் மூத்த மகன் கதாபாத்திரத்தில், பல பொறுப்புகளை கவனிக்கும் கதாநாயகன் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில் ரெட்டி, கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருந்தாலும், கதாநாயகன் வைபவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஹாரிகா, நாடக நடங போலவே நடித்திருக்கிறார்.
லொள்ளு சபா சுவாமிநாதன், கருணாகரன், பாலசரவணன், முனீஷ்காந்த், தனம், தீபா, கஜராஜ், ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறார்கள்.
ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் வலுக்கட்டாயமாக சிரிக்க வேண்டி உள்ளது.
ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். ஒரே வீட்டில் நடக்கும் கதை என்பதால், தனது வித்தியாசமான ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பாடல்கள் அனைத்தும் மிக சுமாராக உள்ளது.
இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் மிகவும் நேர்த்தியாக பயணித்திருக்கிறார்.
முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் நெருட இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம்.
அடங்காத ஆண்குறியை அடக்கம் செய்யும் கதையை எடுத்து கொண்டு கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் திரைப்படம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்கியிருந்தாலும், பல காட்சிகளில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘பெருசு’ திரைப்படம் குடும்பத்துடன் சென்றால் கண்டிப்பாக சிரிக்கலாம்.











