போர் தொழில் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.25./5.
நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், சரத் குமார், நிகிலா விமல், தேனப்பன், “நிழல்கள்” ரவி, O.A.K சுந்தர், சந்தோஷ் கீழட்டூர், சுனில் சுகடா, ஹரிஷ் குமார், கருனாராஜா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் ராஜா.
ஒளிப்பதிவு :- கலைசெல்வன் சிவாஜி.
படத்தொகுப்பு :- ஸ்ரீஜித் சாரங்.
இசை :- ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் :- அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் – E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் – எப்ரியாஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் R மேத்தா, C.V. சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா.
ரேட்டிங் :- 4.25./ 5.
இந்த போர் தொழில் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, அடடா, இப்படி ஒரு புலனாய்வு திரில்லர் ஜானரில் சுவாரசியமான திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது என வியக்க வைத்துவிட்டார் இயக்குனர் விக்னேஷ் ராஜா
இப்படி ஒரு நல்ல திரைப்படம் கொடுத்ததற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் விக்னேஷ் ராஜா யாருயா நீ இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த என்று திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் கேட்க வைத்து விட்டார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.
இந்த திரைப்படத்தின் சுவாரசியத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்
இயக்குனர் விக்னேஷ் ராஜா
திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 வயது மதிப்புமிக்க நான்கு இளம்பெண்கள் கழுத்தறுத்து ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட, நிலையில் அதை விசாரிக்க சிபிசிஐடி உயர் அதிகாரியான சரத்குமார் நியமிக்கப்படுகிறார்.
படித்து முடித்துவிட்டு புதிதாக காவல்துறை அதிகாரியாக வேலையில் சேரும் அசோக் செல்வன் மற்றும் ஏற்கனவே காவல்துறை பணியில் இருக்கும் நிகிலா விமல் சிபிசிஐடி உயர் அதிகாரியான சரத்குமாருடன் இணைந்து அந்தக் கொலைகளை விசாரித்து வருகின்றனர்.
விசாரணை தொடக்கத்தில் திணறும் இவர்கள், முப்பது வருடங்களுக்கு முன்பு இதே போன்ற தொடர் கொலைகள் நடந்திருப்பதை முவரும் கண்டுபிடிக்கிறார்கள்.
இப்போது வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கும் இப்போது நடக்கும் தொடர் கொலைகளுக்கும் என்ன சம்மதம் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள்.
இந்த தொடர் கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இநத போர் தொழில் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த போர் தொழில் திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார்.
பயந்து நடுங்கும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமாகவும் அற்புதமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்களில் அசோக் செல்வனும் ஒருவர் அதை அவர் மீண்டும் இந்தப் போர் தொழில் திரைப்படத்தில் நிரூபித்துள்ளார்.
ஆனால் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களை எடுத்துப் பார்க்கும்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படங்களும் இல்லை.
தற்போது அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் போர் தொழில் திரைப்படம் கண்டிப்பாக அவரை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த போர்ட்ரில் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உயிர் காவல் துறை அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரி லோகநாதன் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார்.
லோகநாதன் கதாபாத்திரம் நடித்திருக்கும் சரத்குமார் அவர்களுக்கு தமிழ் திரைப்பட உலகில் இந்த கதாபத்திரம் ஒரு முத்திரை பதிக்கும் என்று சொல்லலாம்.
நிகிலா விமல் அளவாக பேசி அளவாக நடித்துள்ளார்.
அவருக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் தான்.
பி.எல் தேனப்பன் கொஞ்சம் நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார்.
இந்த போர் தொழில் திரைப்படத்தில் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ்!
ஒளிப்பதிவாளர் கலைசெல்வம் சிவாஜியின் ஒளிப்பதிவு
திரைக்கதைக்கு இணையாகப் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் கலைசெல்வம் சிவாஜியின் உழைப்பு மட்டும் தனித்து தெரிகிறது.
அதேபோல், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை ஒருவித திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
‘கடமைனு வந்தா காமத்தை தள்ளி வைக்கனும்யா’ என்பது போன்ற ஜாலியான வசனங்களும், ‘பயந்தவங்கலாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை’ என்பது போன்ற சீரியசான வசனங்களும் கவனத்தை ஈர்க்கிறது.
மொத்தத்தில் போர் தொழில்; திரைப்படம் தமிழில் வந்த நல்ல கிரைம் திரில்லர்!
நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், சரத் குமார், நிகிலா விமல், தேனப்பன், “நிழல்கள்” ரவி, O.A.K சுந்தர், சந்தோஷ் கீழட்டூர், சுனில் சுகடா, ஹரிஷ் குமார், கருனாராஜா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் ராஜா.
ஒளிப்பதிவு :- கலைசெல்வன் சிவாஜி.
படத்தொகுப்பு :- ஸ்ரீஜித் சாரங்.
இசை :- ஜேக்ஸ் பிஜாய்.
தயாரிப்பு நிறுவனம் :- அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் – E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் – எப்ரியாஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் R மேத்தா, C.V. சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா.
ரேட்டிங் :- 4.25./ 5.
இந்த போர் தொழில் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, அடடா, இப்படி ஒரு புலனாய்வு திரில்லர் ஜானரில் சுவாரசியமான திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது என வியக்க வைத்துவிட்டார் இயக்குனர் விக்னேஷ் ராஜா
இப்படி ஒரு நல்ல திரைப்படம் கொடுத்ததற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் விக்னேஷ் ராஜா “யாருயா நீ, இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த என்று திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் கேட்க வைத்துவிட்டார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.
இந்த திரைப்படத்தின் சுவாரசியத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்
இயக்குனர் விக்னேஷ் ராஜா
திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 வயது மதிப்புமிக்க நான்கு இளம்பெண்கள் கழுத்தறுத்து ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட, நிலையில் அதை விசாரிக்க சிபிசிஐடி உயர் அதிகாரியான சரத்குமார் நியமிக்கப்படுகிறார்.
படித்து முடித்துவிட்டு புதிதாக காவல்துறை அதிகாரியாக வேலையில் சேரும் அசோக் செல்வன் மற்றும் ஏற்கனவே காவல்துறை பணியில் இருக்கும் நிகிலா விமல்
சிபிசிஐடி உயர் அதிகாரியான சரத்குமாருடன் இணைந்து அந்தக் கொலைகளை விசாரித்து வருகின்றனர்.