குலசாமி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் நடிகைகள் :- விமல், தான்யா ஹோப், கீர்த்தனா திருநாவுக்கரசு, ஜனனி பாலு, வினோதினி, போஸ் வெங்கட் MP.முத்துப்பாண்டி, லாவண்யா, சூர்யா, S R ஜாங்கிட் IPS, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- – “குட்டிப்புலி” ஷரவண ஷக்தி.

ஒளிப்பதிவு :- “Wide angle” ரவி ஷங்கர்.

படத்தொகுப்பு :-  கோபி கிருஷ்ணன்.

இசை :- VM மகாலிங்கம்.

தயாரிப்பு நிறுவனம் :- MIK புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- MIK புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :- 2.5./ 5.

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகன் விமலுக்கு ஒரு தங்கை பெற்றோர் இல்லாத நிலையில் தங்கையை பாசமாக வளர்த்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.

தங்கையும் பிளஸ்- 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறார்.

மருத்துவ கல்லூரியில் சேர்க்க பணம் இன்றி தடுமாறும்போது ஊர் மக்கள் உதவி செய்து டாக்டருக்கு படிக்க வைக்கிறார்கள்.

இந்த நிலையில் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கும்பல் பிடியில் கதாநாயகன் விமலில் தங்கை சிக்குகிறார்.

அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பின்னர் சிலரால் கதாநாயகன் விமலின் தங்கை உயிர் பிரிகிறது.

இறந்த தங்கையின் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்விக்காக தனது தங்கையின் உடலை தானமாக கதாநாயகன் விமல் வழங்கிவிடுகிறார்

கதாநாயகன் விமல் தங்கை படித்த மருத்துவ கல்லூரியின் அருகில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டு தினமும் மருத்துவ கல்லூரியில்  வைக்கப்பட்டிருக்கும் தன் தங்கையின் உடலை கதாநாயகன் விமல் பார்த்து ஆறுதல் கொள்கிறார்.

இதனிடையே கல்லூரியில் பணம் கட்ட முடியாத மாணவிகளை குறிவைத்து கல்விக்காக அவர்களின் படிப்பு செலவு போன்ற பிற விஷயங்களுக்காக உதவி செய்து மாணவிகளை தப்பான வழிக்கு அழைத்து செல்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்க தன் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடி வருகிறார் கதாநாயகன் விமல்.

இறுதியில் கதாநாயகன் விமலின் தங்கை கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு சென்றவர்களை கதாநாயகன் விமல் என்ன செய்தார்? என்பதுதான் இந்த குலசாமி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குலச்சாமி திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார்.

தங்கையை இழந்த அண்ணனாக விமல் மிக அருமையாக நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார்.

இவரின் எதார்த்த நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது.

இந்த குலச்சாமி திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.

கதாநாயகி தன்யா ஹோப் இந்த கதையை எதற்காக தேர்ந்தெடுத்தார்கள் என தெரியவில்லை.

கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு திரைப்படத்தில் முக்கியத்துவம் இல்லை.

காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கதாபாத்திரத்தில் வரும் எம்.பி.முத்துபாண்டி  கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டராக வரும் எம்.பி.முத்துபாண்டி இறுதி காட்சிகள்தான் தெரிகிறது இவர்தான் கதாநாயகன் விமலுக்கு உதவி புரிந்து கொண்டிருக்கிறார்.

எம் பி முத்துப்பாண்டி கிளைமாக்ஸ் காட்சிகளில் பேசும் வசனங்கள் பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கு கண்டிப்பாக தனது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்.

திரைப்படத்தில் தோன்றும் போஸ் வெங்கட், சரவண சக்தி, வினோதினி வைத்தியநாதன், மகாநதி சங்கர் என பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும் காட்சிகள் தரம் இல்லாதது குறையாக இருக்கிறது.

இசையமைப்பாளர் மகாலிங்கத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

கல்லூரியில் கல்வி பயில கட்டணம் கட்ட முடியாத சூழல் ஏற்படும் மாணவிகள் குறிவைக்கும் பாலியல் வன்கொடுமை செய்யும் கும்பல் குறித்த கதையை தேர்ந்தெடுத்து மிக அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

நல்ல கதையை யோசித்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் திரைப்படம் நன்றாக இருந்திருக்கும்.

குலசாமி திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதி இருக்கிறார் என்று டைட்டில் காட்டில் போட்டார்கள் நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதிய திரைப்படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நடிகர் விஜய் சேதுபதியின் வசனம் ஆனால் அனைத்து காட்சிகளிலும் வசனங்கள் ஒன்று கூட வலிமை இல்லை என்பதுதான் வருத்தம்.

மொத்தத்தில் குலசாமி – திரைப்படம் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால் பெண்களை காக்கும் குலதெய்வமாக இருந்திருக்கும்.