யாத்திசை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4.5/ 5.
நடிகர் நடிகைகள் :- ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தரணி ராசேந்திரன்.
ஒளிப்பதிவு :- அகிலேஷ் காத்தமுத்து.
படத்தொகுப்பு :- மகேந்திரன் கணேசன்.
இசை :- சக்கரவர்த்தி.
தயாரிப்பு நிறுவனம் :- வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் :- கே.ஜெ.கனேஷ்.
ரேட்டிங் :- 4.5/ 5.
பல நூறு கோடிகளைக் முதலீடு செய்து எடுக்கப்பட்ட பாகுபலி பொன்னியின் செல்வன் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை மக்களை பார்க்க வைப்பதற்காக, அந்த திரைப்படக்குழுவினர்கள் ஊர் ஊராக நாடு நாடாக சென்று விளம்பரங்கள் செய்து கொண்டிருக்க, எங்களாலும் பாண்டிய அரசர் கால திரைப்படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுக்க முடியும் என்று சொல்லி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பாராட்டியாக வேண்டும்.
7ஆம் நூற்றாண்டில் சேரன் தலைமையிலான சோழப் பேரரசு, பாண்டிய பேரரசை போர் புரிகிறது.
இவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி மக்கள் கூட்டமும் துணை நின்று போர் புரிகிறது.
போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு வென்று, சோழக் கோட்டையோடு சேர்த்து, மொத்த தென் திசையையும் கைப்பற்றுகிறது.
சோழ நாட்டை கைப்பற்றி ரணதீர பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த போரில் சோழர்களுக்கு உதவிய பல சிறுகுடிகளில் எயினர்களும் இருக்கிறார்கள்.
சோழர்கள் நடந்த போரில் தோல்வியடைந்து காட்டுக்குள் பதுங்கி விடுகிறார்கள்.
சோழர்களுக்கு போரில் உதவி புரிந்த எயினர்கள் சொந்த நிலத்துக்கு விரட்டியடிக்கப்பட்டு விடுகிறார்கள்.
அங்கு வேட்டையாடி சமூகமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவர்கள் பாண்டிய மன்னனை வீழ்த்தி விட்டு மீண்டும் சொந்த நாட்டில் வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
எயினர்கள், அனைவரும் மொத்த படையையும் திரட்டி பாண்டிய மன்னனை ரணதீர பாண்டியன் காலி செய்து விட்டு அந்த நாட்டை கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெற்றதா? பெறவில்லையா? இல்லையா? என்பதுதான் இந்த ‘யாத்திசை’ திரைப்படத்தின் மீதி கதை.
இந்த யாத்திசை திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரணதீர பாண்டியன் ஷக்தி மித்ரன் நடித்திருக்கிறார்.
எயினர் குடி தலைவன் கொதி கதாபாத்திரத்தில் சேயோன் நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர்கள் இருவரும் அறிமுகம் இல்லாத முகங்களதான்.
இந்த யாத்திரை திரைப்படத்தில் இவர்கள் மட்டும் இன்றி திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அறிமுகம் இல்லாத முகங்களதான்.
ஆனால், இவர்கள் அனைவரும் அறிமுகம் இல்லாத முகங்கள் என் மறந்துவிட்டு உயிரைக் கொடுத்து வெறித்தனமாக நடித்திருக்கிறார்கள்.
இந்த யாத்திரை திரைப்படத்தில் ராஜலட்சுமி, வைதேகி இருவரும் தேவரடியார்களாக ஒரு சில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
திரைப்படம் பார்க்கும் நமக்கு புதுமுக நடிகர்கள் என்ற எண்ணம் தோன்றாதபடி மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
நமக்கு தெரிந்த முகம் என்றால் குரு சோமசுந்தரம், சுபத்ரா, மட்டுமே.
எயினர் கூட்டத்தின் பூசாரியாக வரும் குரு சோமசுந்தரம் ஒரே ஒரு நீண்ட காட்சியில் வந்தாலும் வலுசேர்த்துள்ளார்.
குரு சோமசுந்தரம் ஒரு காட்சி வந்தாலும் அவருடைய அனுபவ நடிப்பை கொடுத்து சென்று விடுகிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரம் தேர்வு மிக அருமையாக உள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் மிக கடுமையாக உழைத்திருப்பது திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் அதிக அளவில் உள்ள காட்சி போர்க்கள காட்சிகள் தான்.
ஆனால், நாம் வழக்கமான சரித்திர திரைப்படங்களில் பார்த்திருக்கும் போர்க்கள காட்சிகள் போல் அல்லாமல், நம் மனதுக்கு நெருக்கமாக, நாமே அந்த போர்க்களத்தில் பயணிப்பது போன்ற உணர்வை தரும் விதத்தில் மிக தத்ரூபமாக திரைப்படமாக்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சண்டை பயிற்சியாளர் ஒம் பிரகாஷ்.
இந்த திரைப்படத்தில் போர்க்கள காட்சிகள் மட்டும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கதை போர்க்களக் காட்சி திரைக்கதை போர்க்களக் காட்சி சண்டை பயிற்சியாளர் ஓம் பிரகாசுக்கு இந்திய திரைப்பட உலகில் மிகப்பெரிய இடம் கண்டிப்பாக காத்துக் கொண்டிருக்கிறது.
திரைப்படத்தில் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பயன் படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை லைவ் லொக்கேஷனில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்துவின் பணி தமிழ் திரைப்பட உலகில் அகிலம் போற்றும் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து வலம் வருவார்கள் என்பது உறுதி.
.சரித்திர போர் திரைப்படங்களின் வழக்கமான பாணியை உடைத்தெறிந்து உண்மைக்கு நெருக்கமாக சொல்லப்பட்டிருக்கும் இயக்குநர் தரணி ராசேந்திரன் வாழ்த்துக்கள்.
பாண்டிய மன்னனையும், அவரை எதிர்த்து போரிட்ட எயினர் குடியையையும் மையப்படுத்தி கதை எழுதினாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதத்தில், தற்காலத்து உலக யுத்த அரசியலை இயக்குநர் தரணி ராசேந்திரன் நினைவுப் படுத்தியிருக்கிறார்.
இந்த யாத்திசை திரைப்படத்தின் காட்சிகளை வடிவமைத்த விதம் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் இருப்பது இந்த திரைப்படத்திற்கு புதிய முயற்சி மட்டும் இன்றி, யாத்திசை திரைப்படம் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதற்கும் அதுவே முக்கிய காரணமாக இயக்குநர் தரணி ராசேந்திரன் உழைப்பு அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் யாத்திசை திரைப்படம் இந்திய திரைப்பட உலகில் பொக்கிஷம்.