09/06/2025 இன்றைய ராசிபலன்கள்
09-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 26
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ திரயோதசி – Jun 08 07:18 AM – Jun 09 09:36 AM
சுக்ல பக்ஷ சதுர்தசி – Jun 09 09:36 AM – Jun 10 11:35 AM
நட்சத்திரம்
விசாகம் – Jun 08 12:42 PM – Jun 09 03:31 PM
அனுஷம் – Jun 09 03:31 PM – Jun 10 06:01 PM
கரணம்
சைதுளை – Jun 08 08:29 PM – Jun 09 09:36 AM
கரசை – Jun 09 09:36 AM – Jun 09 10:38 PM
வனசை – Jun 09 10:38 PM – Jun 10 11:36 AM
யோகம்
சிவம் – Jun 08 12:17 PM – Jun 09 01:08 PM
ஸித்தம் – Jun 09 01:08 PM – Jun 10 01:44 PM
வாரம்
திங்கட்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:05 AM
சூரியஸ்தமம் – 6:32 PM
சந்திரௌதயம் – Jun 09 5:02 PM
சந்திராஸ்தமனம் – Jun 10 4:54 AM
அசுபமான காலம்
இராகு – 7:38 AM – 9:12 AM
எமகண்டம் – 10:45 AM – 12:19 PM
குளிகை – 1:52 PM – 3:25 PM
துரமுஹுர்த்தம் – 12:43 PM – 01:33 PM, 03:13 PM – 04:03 PM
தியாஜ்யம் – 07:56 PM – 09:42 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:54 AM – 12:43 PM
அமிர்த காலம் – 05:40 AM – 07:27 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:29 AM – 05:17 AM
ஆனந்ததி யோகம்
மித்திரம் Upto – 03:31 PM
மானசம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
சூர்யா ராசி
சூரியன் ரிஷபம் ராசியில்
சந்திர ராசி
ஜூன் 09, 08:50 AM வரை துலாம் ராசி, பின்னர் விருச்சிகம்
திங்கள்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
09-06-2025 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கடன் விஷயங்களால் வருத்தங்கள் நேரிடும். பயனற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : அனுபவம் மேம்படும்.
கிருத்திகை : வாதங்கள் மறையும்.
ரிஷபம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
மிதுனம்
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
கடகம்
காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : கையிருப்புகள் குறையும்.
ஆயில்யம் : தாமதங்கள் குறையும்.
சிம்மம்
கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் சிந்தனைகளில் சில மாற்றத்தை ஏற்படுத்தும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : முடிவு பிறக்கும்.
உத்திரம் : புரிதல் மேம்படும்.
கன்னி
சிறுதூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் விருத்திக்கான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
துலாம்
ஆடம்பரமான விஷயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். வருவாய் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்ளவும். விதண்டாவாதப் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்
வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். புதுமையான விஷயங்களால் விரயம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நன்மை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூராடம் : பொறுப்புகள் குறையும்.
உத்திராடம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
மகரம்
விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினைகளில் தெளிவு ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் வர்த்தகத்தில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : ஆதரவான நாள்.
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்
பெற்றோர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உலக நடவடிக்கைகள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
மீனம்
நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : குழப்பங்கள் விலகும்.


