’ரெட்ட தல’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ், யோகேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கிரிஷ் திருக்குமரன்.
ஒளிப்பதிவாளர் :- டிஜோ டாமி.
படத்தொகுப்பாளர் :- ஆண்டனி.
இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- BTG யுனிவர்சல்.
தயாரிப்பாளர் :- பாபி பாலச்சந்திரன்.
ரேட்டிங் :- 3.5./5.
கதாநாயகன் அருண் விஜய் மற்றும் கதாநாயகி சித்தி இத்னானி, ஆகிய இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்திக்கும் நிலையில் இருவருக்கும் தாய் தந்தையை இழந்து அனாதை என தெரிய வர பாண்டிச்சேரியில் இருவரும் வளர்ந்து வருகிறார்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசி ஒன்றாகவே வளர்கிறார்கள்.
கதாநாயகன் அருண் விஜய் மற்றும் கதாநாயகி சித்தி இத்னானி, இவர்களுடைய சிறு வயது முதல் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
காதலிக்க தொடங்கிய சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற கதாநாயகன் அருண் விஜய் பல வருட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகி சித்தி இத்னானி, சந்திக்க வருகிறார்.
இந்த நிலையில், கதாநாயகி சித்தி இத்னானி, மாடல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு மாடலாகும் கனவு நடக்காமல் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிகிறார்.
கதாநாயகன் அருண் விஜய் பல வருடம் கழித்து வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கதாநாயகி சித்தி இத்னானி, இடம் கூறுகிறார்.
ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் கதாநாயகி சித்தி இத்னானி, உன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தால் மட்டுமே நமது காதல் மற்றும் திருமணத்தில் ஒன்று சேரலாம் எனக் கூறி தடை போட்டுவிடுகிறார்.
இதனையடுத்து கதாநாயகன் அருண் விஜய் அங்கிருந்து சென்றுவிட இரவு நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு காரில் மோதி கீழே விழும் நிலையில் அந்தக் காரில் இருந்து தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திரா என்ற ஒருவரை கதாநாயகன் அருண் விஜய் சந்திக்கிறார்.
கதாநாயகன் அருண் விஜய் மற்றும் தன்னைப் போல் உருவம் கொண்ட மற்றொரு கதாநாயகன் அருண் விஜயையும் இருவரும் இவரின் வீட்டிற்கு செல்கிறார்கள்.
அங்கு சென்ற (கானி) கதாநாயகன் அருண் விஜய் (உபேந்திரா) மற்றொரு கதாநாயகன் அருண் விஜய் தன்னை போல ஸ்டைலாக மாற்றுகிறார்.
குபேந்திரா மற்றும் காளி இரண்டு கதாநாயகன் அருண் விஜய்யும் நண்பர்களாகி விடுகிறார்கள்
அதன் பின்னர் ஒருநாள் கதாநாயகன் அருண் விஜய் (கானி) என்னை போல் வெளியே சென்று வாழ்ந்து பாரு என மற்றொரு கதாநாயகன் அருண் விஜய் (உபேந்திரா) கூறினார்.
கதாநாயகன் அருண் விஜய் (குபேந்திரா) உடனடியாக காரை எடுத்துக் கொண்டு (காளி) கதாநாயகன் அருண் விஜய் தனது காதலி கதாநாயகி சித்தி இத்னானி, சந்திக்கிறார்.
அனைத்து விஷயம் காதலி கதாநாயகி சித்தி இத்னானி, தெரிய வருகிறது.
பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என (காளி), கதாநாயகன் அருண் விஜய் காதலி கதாநாயகி சித்தி இத்னானி, இருவரும் திட்டமிடுகிறார்கள்.
அதன்படி மற்றொரு கதாநாயகன் அருள் விஜய் (உபேந்திரா) கொலை செய்து சடலத்தை முதலை இருக்கும் இடத்தில் வீசி விடுகிறார்கள்.
கதாநாயகன் அருண் விஜய் மற்றொரு கதாநாயகன் அருண் விஜய் உபேந்திராவை கொலை செய்ததால் பல பிரச்சினைகள் மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் கதாநாயகன் அருண் விஜய் (கானி) மற்றும் காதலி கதாநாயகி சித்தி இத்னானி, பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி கொள்கிறார்கள்.
கதாநாயகன் அருண் விஜய் (கானி) மற்றும் கதாநாயகி சித்தி இத்னானி, இருவரும் காதலில் இனைத்து கதாநாயகன் அருண் விஜய் (உபேந்திரா) அடையாளம் மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு இருவரும் காதலில் இணைந்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்களா?, வாழவில்லையா?, என்பதுதான் இந்த “ரெட்ட தல” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “ரெட்ட தல” திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்திருக்கிறார்
கதாநாயகன் அருண் விஜய் இந்த மாதிரி இரட்டை வேடம் கதாபாத்திரங்கள் என்றால் அனைத்தும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், சண்டைக் காட்சிகள் மற்றும் நடனக் காட்சிகள் என அனைத்திலும் பட்டையை கிளப்புகிறார்.
இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் அதிகளவில் மெனக்கட்டு வேறுபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கும் கதாநாயகன் அருண் விஜய், திரைக்கதை வேகம் குறையும் போது அந்த இடங்களில் தன்னுடைய நடிப்பு மூலம் வேகத்தை அதிகரிக்க செய்கிறார்.
இந்த “ரெட்ட தல” திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி, நடித்துள்ளார்.
கதாநாயகி சித்தி இத்னானி, அருமையான கதாபாத்திரம் என்றாலும், என்னமோ அவரை இந்தளவிற்கு பணம் மீது அதிக அளவில் ஆர்வமாக இருக்கும் கதாநாயகி சித்தி இத்னானி, இப்படியாப்பட்ட கதாபாத்திரம் கொஞ்சம் கூட அவர் முகத்துக்கு ஒட்டவில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கதையின் கரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, வில்லன் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி முருகதாஸ், தன்யா ரவிச்சந்திரன் யோகி சாமி யோகேஷ் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டிஜோ டாமியின் ஓளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் தரத்தை அதிகரித்திருப்பதோடு, மட்டுமல்லாமல் வித்தியாசமான கோணங்கள் மூலம் திரைப்படம் முழுவதையும் ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில், பாடல்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் தனுஷ் குரலில் “கண்ணம்மா” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில்,
பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனியின் படத்தொகுப்பு திரைப்படத்தை வேகமாக பயணிக்க வைத்திருக்கிறார்.
சாதாரண கதைக்கருவை எடுத்துக் கொண்டு, அருமையான திரைக்கதையை கொடுத்து அதை கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன்.
மொத்தத்தில், ‘ரெட்ட தல’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.











