‘ரிங் ரிங்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷக்திவெல்.

ஒளிப்பதிவாளர் :- பிரசாத் டி எஃப். டெக்.

படத்தொகுப்பாளர் :-  : பி.கே.

இசையமைப்பாளர் :-  இசாய் பெட்டாய் வசந்த்.
.
தயாரிப்பு நிறுவனம் :- தியா சினி கிரியேஷன்ஸ் & ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள்:- ஜெகன் நாராயணன் & ஷக்திவெல்.

ரேட்டிங் 2.5/5.

பள்ளி கல்லூரி காலங்களில் இருந்து சிறு இணைபிரியாத நண்பர்களாக இருக்கும், விவேக் பிரசன்னா -ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா என, நான்கு ஜோடிகள் இருக்க பிரவீன் ராஜாவின் பிறந்தநாள் அன்று அனைவரும் ஒன்று கூடுகிறார்கள்.

நான்கு நண்பர்கள், சுமுகமான உறவில் இருப்பவர்கள் எப்போதும் கேலி கிண்டல் என்று வாழ்பவர்கள் .கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த இந்த நட்பு வட்டத்தில் ஒரு விளையாட்டு தொடங்குகிறது.

பிறந்தநாள் சந்திப்பை முன்னிட்டு அங்கே மகிழ்ச்சியாகக் கூடியவர்கள் மத்தியில் அந்த விளையாட்டு சவாலாகி விபரீதமாகி ஒரு கட்டத்தில் யுத்தமாக மாறுகிறது.

அப்படி என்ன விளையாட்டு?கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு வந்த போனை ஸ்பீக்கர் போட்டு அடுத்தவர்கள் கேட்க வேண்டும்.

அதேபோல் மனைவியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வரும் தொலைபேசிகளால் அவர்களது மன உணர்வுகளும் ஒருவருக்கொருவர் பொய்யாக நடிப்பதும் அம்பலமாகிறது.

இப்படியே சென்று கொண்டிருந்ததால் நான்கு ஜோடி வாழ்க்கையிலும் புயல் அடிக்க தொடங்குகிறது.

கருத்து மோதல், சந்தேகங்கள், துரோகங்கள், அவமானங்கள் போன்றவை முளைக்கின்றன. அவர்கள் மத்தியில் விரிசல்கள் விழுகின்றன.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

இந்த நான்கு ஜோடிகளுக்கும் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பதுதான் இந்த ரிங் ரிங் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரிங் ரிங் திரைப்படத்தில் தியாகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, பூஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல்,சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் ராஜா, அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனன், சுயமாக ஸ்வயம் சித்தா, இந்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஹானா, ஜமுனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜமுனா என அனைவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்

இயல்பான நடிப்பால் அந்த ஜோடி முதலிடம் பெறுகிறது.

சில இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

இன்னொரு பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம் மாட்டிக் கொள்ளும் போது போதையில் செஞ்சிட்டேன் என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல் நடிப்பும் கலகல ரகம்.பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.

அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும் புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.

குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.

அனைத்து கதாபாத்திரங்களின் சித்தரிப்பு சரியாக இருப்பதால் அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசாத்.
உள்ளரங்கில் நடக்கும் காட்சிகளை அழகாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மிடையே நெருக்கமாகக் கொண்டு வருகிறார்.

ஒளிப்பதிவாளர் பிரசாத்.
திரைப்படத்திற்கு ஏற்ற துல்லியமான வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார்

இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டை. இசையில் பாடல்கள்’அழகான நேரங்கள் ‘பாடல் மீண்டும் கேட்கும் ரகம்.

கதைக்குப் பொருத்தமான பின்னணி இசை வழங்கி காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்துள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியே வெளிப்பட்டுள்ளன.திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் பெரிதாக வெளிப்புறக் காட்சிகளுக்கு அவசியம் இல்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ரிங் ரிங் திரைப்படம் தொலைக்காட்சித் தொடர்களின் உரையாடல் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது.

error: Content is protected !!