‘செய் செய்யாதே’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- குரு விஜய், தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா டாக்டர் எஸ். ராஜா, தர்ஷினி ரெட்டி, மோனிகா ப்ரீத்தி V, பிரதீக்ஷா மனோ பிரசாந்த், திவ்யா, சிதம்பரம் PDK, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- டாக்டர் எஸ். ராஜா.
ஒளிப்பதிவாளர் :- வாசு பி. ராம்நாத்.
படத்தொகுப்பாளர் :- ராஜா முகமது.
இசையமைப்பாளர் :- டாக்டர் எஸ். ராஜா மற்றும் ஹரிணி சுப்பு மியூசிக் டீம்.
தயாரிப்பு நிறுவனம் :- ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுப்புலட்சுமி ஜெயராம்.
மக்கள் தொடர்பு :- சிவக்குமார், ராஜா.
வெளியீட்டு தேதி :- 30 அக்டோபர் அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3.5/5.
செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய வேண்டும், செய்யக்கூடாததைத் தவிர்க்க வேண்டும் என்ற வாழ்க்கையின் ஆழமான உண்மையை உணர்த்தும் படைப்பாக ‘செய் செய்யாதே’ திரைப்படம் அமைந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறையில் முதல்வராக பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர் எஸ். ராஜா உடல் நலக் குறைவினால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு மிக கண்ணியமான முறையில் நேர்மையாக சிகிச்சை அளித்து, நடுத்தர மக்களுடன் ஏழை எளிய மக்களின் நிலைமையை புரிந்து கொண்டு மதுரை வாழ் மக்களின் மருத்துவ பாதுகாவலனாக மருத்துவ துறையில் சேவை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு கண்ணியமான முறையில் நேர்மையாக சிகிச்சை அளித்து, வரும் டாக்டர் எஸ். ராஜாவின் மனைவி தர்ஷினி ரெட்டி வங்கியில் கடன் பெற்று சொந்தமாக பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஆரம்பித்து சிகிச்சைக்கு வரும் பெண்கள் ஏழை எளிய மக்களாக இருந்தாலும் சிகிச்சை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை வசூலிக்கிறார்.
டாக்டர் எஸ். ராஜா அவருடைய மனைவி தர்ஷினி ரெட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளையும் டாக்டர் எஸ். ராஜா தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் தான் பணிபுரிந்து கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து தகுந்த சிகிச்சை அளித்து மனிதநேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார்.
மற்றொரு பக்கம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் டாக்டர் எஸ். ராஜா மகன் கதாநாயகன் குரு விஜய் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தொழிலதிபர் சிதம்பரம் PDKவின் மகள் கதாநாயகி தபிதா குணரத்னேவை காதலிக்கிறார் .
இதற்கிடையில் கதாநாயகி தபிதா குணரத்னே, தந்தை சிதம்பரத்தின் PDKவின் மருந்து கிடங்குகளுக்கு அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் டாக்டர் எஸ். ராஜா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் காலையில் பணிக்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பிக்கிறார் .
இந்த நேரத்தில் அதே அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் அமைச்சரின் உறவினர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வராததால் அவரை டாக்டர் எஸ் ராஜா கண்டிக்கிறார்.
மேலும் மருத்துவமனையில் செவிலியர்கள் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து டாக்டர் எஸ் ராஜா அவர்களுக்கும் புத்திமதி சொல்கிறார் .
இதனால் டாக்டர் எஸ் ராஜாவின் நோயாளிகளிடமும், மற்றும் பணியாளர்களிடம் பழகும் நேர்மையான அணுகு முறையால் பாதிக்கப்பட்ட எதிரிகளான டாக்டராக பணிபுரியும் அமைச்சரின் உறவினர் மற்றும் அவருடைய மனைவி தர்ஷினி ரெட்டி மற்றும் அமைச்சர், தொழிலதிபர் சிதம்பரம் PDK என அனைவரும் இனைத்து டாக்டர் எஸ் ராஜாவை மதுரையை விட்டு விரட்ட திட்டமிடுகின்றனர்.
இறுதியில் எதிரிகள் திட்டத்திலிருந்து டாக்டர் எஸ் ராஜா தப்பித்தாரா?, தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘செய் செய்யாதே’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘செய் செய்யாதே’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மருத்துவர் எஸ் ராஜா நடித்திருக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மருத்துவர் எஸ் ராஜா தனது இயல்பான நடிப்பில் புதுமுக நடிகரை போல இல்லாமல் கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வுபூர்வமான ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என மனநிலையில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
டாக்டர் எஸ் ராஜா அவர்கள் உண்மையான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘செய் செய்யாதே’ திரைப்படத்தில் கதாநாயகனாக குரு விஜய் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் குரு விஜய் காதல் , நடனம், செண்டிமெண்ட் என உடல் மொழியில் இளமை துள்ளும் நடிப்பை மிகவும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
இந்த ‘செய் செய்யாதே’ திரைப்படத்தில் தபிதா குணரத்னே நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தபிதா குணரத்னே கதைகேற்றபடி அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்கிறார் .
சிறப்புத் தோற்றத்தில் தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாஜக மூத்த தலைவர் ஐயா ஹெச். ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்துகிறது.
டாக்டர் எஸ் ராஜாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்ஷினி ரெட்டி, மோனிகா ப்ரீத்தி V, பிரதீக்ஷா மனோ பிரசாந்த் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் :- வாசு பி. ராம்நாத் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் டாக்டர் எஸ் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது.
பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
மருத்துவத்தை மையமாகக் கொண்டு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் தன்னலமற்ற சேவை, குடும்ப உறவுகளின் உன்னதம் எனப் பல உணர்வுபூர்வமான அம்சங்களை அழகாக இணைத்து, சமூக அக்கறையுடன் மருத்துவ விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தை மனிதநேயத்துடன் இயக்கியிருக்கிறார் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (Dr. S. Raja M.D., USA).
மனித வாழ்க்கையில் மருத்துவத்துறையின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் கதைக்களம் அமைந்து ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் மருத்துவர் மட்டுமல்லாமல் செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், நிர்வாகம் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
டாக்டர் எஸ் ராஜா அவர்கள் உண்மையான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சி எம் ஓ மற்றும் முதல்வராக பணிபுரிந்த காலங்களில் நடந்த அவலங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்ட இந்த செய்! செய்யாதே!’ மருத்துவ உலகின் மறுபக்கத்தைப் பேசும் மனிதநேயப் படைப்பு.












