‘பிபி180’ (BP180) திரைப்பட விமர்சனம்.

நடிகர் நடிகைகள்:- தன்யா எஸ் ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ், நயனா சாய், ஸ்வேதா டோரதி, அருணாச்சலம் ரஞ்சித், ரங்கா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- : ஜே.பி.

ஒளிப்பதிவாளர் :-  ராமலிங்கம்.

படத்தொகுப்பாளர் :- இளையராஜா சேகர்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.

தயாரிப்பு நிறுவனம் :-  ரேடியன்ட் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் & அதுல் இந்தியா மூவிஸ்.

தயாரிப்பாளர்கள் :- பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா, ராஜேஷ் தாக்கூர், பரேஷ் ஜக்தா, ஹிரேன் படேல்.

ரேட்டிங் :- 2.5./5.

சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள மிகப்பெரிய தாதாவான  டேனியல் பாலாஜி, திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ.வான பாக்கியராஜின் மகள் விபத்து ஒன்றில் மரணம் அடைகிறார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ.வான பாக்கியராஜின் மகள் விபத்தில் மரணம் அடைந்த விஷயத்தை கேள்விப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகளின் உடலை பார்க்க செல்லும் நிலையில் தனது மகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் தன் மகளின் உடலை பெற முயற்சி செய்கிறார்.

இந்த நிலையில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன், நான் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சட்டத்தின் படி தான் என்னால் நடக்க முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார்.

மருத்துவராக இருக்கும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனிடம், காவல்துறை அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் சென்னை, காசிமேடு பகுதியில் உள்ள மிகப்பெரிய தாதாவான டேனியல் பாலாஜி, என்று யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அடிபணியாமல் மிகவும் நேர்மையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மிகவும் ஒரு மருத்துவராக இருக்கிறார்.

முன்னாள் எம்எல்ஏவான பாக்யராஜ் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனிடம், தன்னுடைய மகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என கெஞ்சி கேட்க மருத்துவர் என்ன சட்டமோ அதன் பிறகு தான் நடந்து கொள்வேன் என கூறிவிடுகிறார்.

இதனால்,  காசிமேடு பகுதியில் உள்ள மிகப்பெரிய தாதாவான டேனியல் பாலாஜி, மருத்துவர் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

அரசு பொது மருத்துவமனையில் அரசாங்க மருத்துவரான கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனுக்கு, இந்த விவகாரத்தில் தலையிடும் தாதாவான டேனியல் பாலாஜி  கொலை மிரட்டல் விடுத்ததால் சென்னை காவல்துறை ஆணையர்,தாதா டேனியல் பாலாஜியை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து  மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார்.

இந்த நிலையில் தாதாவான டேனியல் பாலாஜி கோபம் கொண்டு காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி மருத்துவர் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறார்.

அதன் பிறகு அரசாங்க மருத்துவர் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனை தாதாவான டேனியல் பாலாஜி பழி தீர்த்துக் கொண்டாரா?, பழி தீர்த்துக்கொள்ளவில்லையா?,

எம்எல்ஏ வன பாக்யராஜின் விபத்தில் மரணம் அடைந்த மகளை பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை வாங்கினாரா?, வாங்க வில்லையா?, என்பதுதான் இந்த பிபி 180 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பிபி 180 திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்  தங்கம் என்ற மருத்துவர் கதாபாத்திரத்தில், மிகவும் தைரியமான பெண்ணாக அளவான நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்.

எவ்வளவு பெரிய ஆளிடம் இருந்து மிரட்டல்கள் வந்தாலும், தனது மருத்துவ பணியை மிங நேர்மையாக செய்து முடிப்பதில் முனைப்பு காட்டுவதும், எதிரிகளின் மிரட்டல்களை பயமில்லாமல் கடந்து போகும் அளவிற்கு அலட்சியமாக நடிப்பை கொடுத்து காட்சிகளில் அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார்.

மிகப்பெரிய தாதா  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜியின் மிரட்டல்களுக்கு நடுவே கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன் தான் பணிபுரியும் அரசு மருத்துவர் பணியில் கவனம் செலுத்துபவர், இறுதியாக மிகப்பெரிய தாதாவான டேனியல் பாலாஜிக்கு விடும் சவால், காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அதிர வைக்கிறார்கள்.

 தன் கண்களின் மூலமாக கோபத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரமாக மட்டும் அல்ல, நடிப்பிலும் நடிப்பு மூலம் அரக்கனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் அனுபவம் நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன்  தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கா, தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை மிக சிறப்பாக எந்தவிதமான  குறையின்றி இது சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களிடம்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை வைத்துவிட்டு காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காட்சியை அமைத்து அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை ஆணையரை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த தமிழக  காவல்துறைக்கே கலங்கம் ஏற்படும் வகையில் காட்சி அமைத்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக  போவது போல் இருக்கிறது. 

அரசு பொது மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதல், கதையில் நடக்கும் விளைவுகளை வைத்துக் திரைக்கதை அமைத்து மேக்கிங் மூலம் ரசிகர்களுக்கு முதல் பாதி முழுவதும் மிரட்டி இருக்கிறார். இயக்குனர் ஜெ.பி.

மொத்தத்தில், ‘பிபி 180’ திரைப்படம் திரைப்பட ரசிகர்களுக்கு பிபி ஏறவில்லை.

error: Content is protected !!