ஷாட் பூட் த்ரீ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.
நடிகர் & நடிகைகள் :- சினேகா, வெங்கட் பிரபு. யோகி பாபு. ப்ரணிதி, பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, அருணாசலம் வைத்தியநாதன், காதல் சுகுமார், சாய் தீனா. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அருணாச்சலம் வைத்தியநாதன்.
ஒளிப்பதிவாளர் :- சுதர்சன் சீனிவாசன்.
படத்தொகுப்பு :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- ராஜேஷ் வைத்யா.
தயாரிப்பு நிறுவனம் :- யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- அருணாச்சலம் வைத்தியநாதன்.
ரேட்டிங் :- 3./5.
கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, இரண்டு சிறுவர்களும் மற்றும் ஒரு சிறுமி ப்ரணிதி ஆகியோர்கள் ஒரே பள்ளியில் படிக்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
இந்த சிறுவர் மற்றும் சிறுமி கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, மற்றும் ப்ரணிதி குடும்பங்கள் மிகவும் செல்வ செழிப்பாக உள்ள குடும்பம் தாங்கள் குடியிருக்கும் மிகப் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரியும் செக்யூரிட்டியின் மகனான சிறுவன் பூவையார் அந்த கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, மற்றும் ப்ரணிதி இவர்களுடன் நட்பாக இருக்கிறார்.
சிறுவர்களில் ஒருவனான கைலாஷ் ஹீத், தனது தாயிடம் எனக்கு ஒரு தம்பி பாப்பா விளையாட வேண்டும் என கேட்க அவருடைய தாய் மற்றும் தந்தை வேலை பணி அதிகமாக இருக்க முடியாது என கூறி விடுகிறார்கள்
அப்படி இல்லை என்றால் எனக்கு ஒரு நாய்க்குட்டி விளையாட வேண்டும் என கேட்க எனக்கு நாய் என்றால் பிடிக்காது வேண்டாம் என தாய் கூறி விடுகிறார்.
சிறுவன் கைலாஷ் ஹீத்க்கு பிறந்தநாள் வர இதனுடைய நண்பர்களுக்கான வேதாந்த் வசந்தா, மற்றும் ப்ரணிதி பிறந்தநாள் பரிசாக ஒரு நாய்க்குட்டியை கொடுக்கிறார்கள்.
தனக்கு பிறந்தநாள் பரிசாக வந்த நாய்க்குட்டியை தாய் தந்தையிடம் போராடி அனுமதி பெற்று நாய் குட்டியை வளர்க்கிறார்.
ஒரே பையனான கைலாஷ் ஹீத், அந்த நாய் குட்டியை நமது சகோதரன் உன் மிகவும் பாசமாக வளர்த்து வருகிறேன்.
இந்த நிலையில் ஒரு நாள் தன் தாய் தந்தை ஊரில் இல்லாத நிலையில் பாசமான நாய் தொலைந்து விடுகிறது.
தொலைந்து போன தனது பாசமான நாயைத் தேடி கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி பூவையார் அனைவரும் ஊரெங்கும் தேடி அலைகிறார்கள்.
தனது நாயை தேடும்போது அந்த சிறுவர்கள் சந்திக்கும் நபர்கள் திருடர்கள், ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள், மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் என சிறுவர்களுக்கு தந்த அனுபவமாக இருந்தது.
தொலைந்து போன நாய் என்ன ஆனது நாயை சிறுவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? தேடி சென்ற சிறுவர்களுக்கு என்ன நடந்தது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்த “ஷாட் பூட் த்ரீ” திரைப்படத்தின் மீதிக்கதை.
சிறுவர்கள் கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, சிறுமி ப்ரணிதி மூவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் மூன்று பேரும் உண்மையான நட்பு எப்படி இருக்குமோ அந்த நட்பை அப்படியே திரையில் காண்பித்து இருக்கிறார்கள்.
சினேகா காட்சிகள் அதிக அளவு இல்லை என்றாலும் கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மனைவி மீது அசையும் மகனின் மீது பாசமும் வைத்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தங்கள் திறமையை காட்டி உள்ளனர்.
சிறுவர்களில் ஒருவனின் தந்தையாக சீக்கியர் தமிழ்ப் பற்று உள்ளவர் என்ற காட்சியை திரையில் காண்பித்திருப்பது தமிழ் மீது உள்ள பற்றைக் காட்டியுள்ளது.
அந்த சிறுவர் சிறுமிகளுக்கு உதவி செய்யும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார் பூவையார்.
ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக பூவையார் கதாபாத்திரம் காட்டி உள்ளார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யாவின் இசை மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது.
அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருக்கிறார் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன்.
மொத்தத்தில் “ஷாட் பூட் த்ரீ” ஆபாசம் இல்லாத குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.











