ஆர் யூ ஒ கே பேபி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75./5.
நடிகர் & நடிகைகள் :- சமுத்திரக்கனி, அபிராமி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மிஸ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அசோக், அனுபமா குமார், கவிதாலயா கிருஷ்ணன், வினோதினி வைத்தியநாதன், கலைராணி, lமற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
ஒளிப்பதிவு :- கிருஷ்ணசேகர் டி.எஸ்.
படத்தொகுப்பு :- சி.எஸ்.பிரேம்குமார்.
இசையமைப்பாளர் :- மேஸ்ட்ரோ’ இளையராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- குரங்கு கிரியேட்டிவ் லேப்ஸ்.
தயாரிப்பாளர் :- டாக்டர் ராமகிருஷ்ணன்.
ரேட்டிங் :- 2.75./ 5.
கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவ் டூ கெதரால் இருக்கும் அசோக் மற்றும் முல்லையரசி ஒன்றாக வாழ்ந்து வருவதால் கர்ப்பம் ஆகிறாள்.
மிகப் பெரிய அளவில் கேரளாவில் வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி மற்றும், அபிராமி பலவிதமான மருத்துவங்களை பார்த்தும் குழந்தையில்லாமல் ஏக்கத்துடன் தவித்து வருகிறார்கள்.
இதன் இடையே அசோக் மற்றும் முல்லையரசிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.
முல்லையரசியிடம் இவரிடம் நர்ஸ் வினோதினி நைசாக பேசி அவர் பிரசவிக்கும் குழந்தையை வாங்கி கேரளாவில் உள்ள சமுத்திரகனி மற்றும் அபிராமி தம்பதியினருக்கு பணம் வாங்கிக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.
முல்லையரசி ஒரு ஆண்டு ஆன நிலையில் தனது குழந்தை நமக்கு வேண்டும் என திரும்ப தரும்படி CWCயில் புகார் கொடுக்கிறார்.
சமுத்திரக்கனி மற்றும் அபிராமி குழந்தையை திருப்பி கொடுக்க மனம் இல்லாமல் தர மறுக்கிறார்கள்.
அந்த குடும்பத்தினால் குழந்தை தர மறுப்பதால் விவகாரம் பெரிய அளவில் வெடிக்கிறது.
ஏகப்பட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு தனது “சொல்லாததும் உண்மை” என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ நிகழ்ச்சி மூலமாக நியாயம் வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை குழந்தையின் தாய் முல்லையரசி அணுகுகிறார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ண் குழந்தையை பறி கொடுத்து பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் தாய் முல்லைரசி வைத்து கதையைப் புரிந்து மிக எமோஷனலாக இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.
ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மாறாக காவல்துறையினர் குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விடுகிறது.
இறுதியில் அந்த குழந்தை சமுத்திரகனி மற்றும் அபிராமி குடும்பத்தினருக்கு கிடைத்ததா? கிடைக்கவில்லையா? இல்லை பெற்ற தாய் முல்லையரசிக்கு குழந்தை கிடைத்ததா? கிடைக்கவில்லையா? குழந்தை யாருக்கு கிடைத்தது என்பதுதான் இந்த “ஆர் யூ ஓகே பேபி” திரைப்படத்தில் மீதி கதை.
குழந்தை இல்லாத தம்பதியர்களாக சமுத்திரக்கனி மற்றும் அபிராமி நடித்திருக்கிறார்கள்.
அந்த குழந்தையை பாசமாகவும் அன்பாகவும் பார்த்துக் கொள்வதில் சமுத்திரக்கனையும் அபிராமியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் பெற்றெடுத்த தாயாக முல்லையரசி மிகவும் அற்புதமாகவும் அருமையாகவும் அழகாக நடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் வறுமை,மறுபக்கம் தான் பெற்ற குழந்தை மீது பாசம் என ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் முல்லையரசி.
இவர் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
முருகா அசோக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்துள்ளார்.
சமுத்திரக்கனியின் தாயாக வரும் கலைராணி அருமையான நடித்திருக்கிறார்கள்.
நர்ஸ் ஆக வரும் வினோதினி வைத்தியநாதன் அற்புதமாக அந்த கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார்.
வக்கீலாக வரும் அனுபமா குமார் மிகவும் அருமையாக வாழ்ந்தாலே அந்த குழந்தையை சமுத்திரக்கரிடம் பெற்றுக் கொடுக்கும் போது அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சந்தோஷமாக நடத்தி இருக்கிறார்.
நீதிபதியாக வரும் நரேன் அதிக காட்சிகள் இல்லை என்றாலும் அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசேகர் டி.எஸ் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகவும் அதிக அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் தருவதில் தான் ஒரு இசைஞானி இளையராஜாதான் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசை மற்றும் பிண்ணனி இசை திரைப்படத்திற்க்கு வலு சேர்க்கிறது.
குழந்தையில்லா தம்பதிகளின் வலியையும், தத்து எடுப்பதில் உள்ள நடை முறை சிக்கல்களும் மிக அருமையாக புரிய வைத்து இருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
தாய்மையின் அன்பையும், சில சட்ட சிக்கல்களையும், இந்த சிக்கல் கலையப்பட வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது.
இந்த ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தின் மூலம் மிக அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
மொத்தத்தில் ‘ஆர் யூ ஒகே பேபி. தாய்மையும் அன்பையும் மிக அருமையாக சொல்லி இருக்கும் திரைப்படம்.











