இறைவன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25./5.
நடிகர் & நடிகைகள் :- ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, பேக்ஸ், அழகர் பெருமாள், வினோத் கிஷன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஐ. அகமது.
ஒளிப்பதிவாளர் :- ஹரி.கே. வேதாந்த்.
படத்தொகுப்பு :- ஜே.வி.மணிகண்ட பாலாஜி.
இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபேஷன் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- சுதன் சுந்தரம் & ஜெயராம் .ஜி.
ரேட்டிங் :- 2.25./5.
கதாநாயகன் ஜெயம் ரவி மற்றும் நரேன் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்கள்.
கதாநாயகன் ஜெயம் ரவியின் நண்பரான நரேன் தஙகை கதாநாயகி நயன்தாரா, கதாநாயகன் ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார்.
கதாநாயகன் ஜெயம் ரவிக்கு கதாநாயகி நயன்தாராவின் காதல் மீது கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.
இப்படி போய்கொண்டிருக்கும் போது திடீரென கதாநாயகன் ஜெயம் ரவியின் நண்பர் நரேனிடம் இந்த இளம் பெண்களை கடத்தி மிகவும் கொடூரமாக கை, கால்களை வெட்டி கொன்று கொண்டிருக்கும் ஒரு சீரியல் கில்லர் தொடர்பான வழக்கு ஒன்று இருவரிடமும் விசாரணைக்கு வருகிறது.
கிட்டத்தட்ட ஆறு மாதம் காலங்களுக்கு மேல் தேடியும் அந்த சீரியல் கில்லரை கதாநாயகன் ஜெயம் ரவியின் மற்றும் நண்பர் நரேன் இருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சீரியல் கில்லர் இருக்கும் இடம் நரேனுக்கு தகவல் கிடைக்க அங்கு சென்ற நரேன் சீரியல் கில்லரால் கொலை செய்யப்படுகிறார்.
கதாநாயகன் ஜெயம் ரவியின் உயிர் நண்பரான நரேன் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தன் பணிபுரிந்த காவல்துறை வேலையை விட்டு விட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்த்து வருகிறார்.
திடீரென ஒருநாள் கதாநாயகன் ஜெயம் ரவிக்கு கடிதம் ஒன்று வருகிறது.
இறுதியில் கதாநாயகன் ஜெயம் ரவிக்கு அந்த கடிதம் எழுதியது யார்? மீண்டும் அவர் போலீஸ் வேலையில் சேர்ந்தாரா? சேரவில்லையா? என்பதுதான் இந்த இறைவன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த இறைவன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார்.
வில்லன் சைக்கோ கில்லர் தேடுவது, கண்டுப்பிடிப்பது என பரபரப்பான நடிப்பை கொடுத்து மிக அதிக அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.
இந்த இறைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
கதாநாயகி நயன்தாரா அழகாக வந்து தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகன் ஜெயம் ரவியின் நண்பராக வரும் நரேன், மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
நரேன் மனைவியாக வரும் விஜயலட்சுமி கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.
மிகவும் கொடூரமான வில்லனாக வரும் ராகுல் போஸ் வசனங்களே இல்லாமல் முகபாவனைகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை நடுங்க வைத்துள்ளார்.
மிகவும் கொடூரமான வில்லனாக வரும் ராகுல் போஸ் மிகவும் அமைதியான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
சைக்கோ வில்லன் கதாபாத்திரத்திற்கு ராகுல் போஸ் மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மற்றொரு வில்லனாக வரும் வினோத் கிஷன் இரண்டாம் பாதியை அவருடைய நடிப்பின் மூலம் ஆக்கிரமித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த் சைக்கோ திரைப்படத்திற்கான மனநிலையை தன்து ஒளிப்பதிவு மூலம் அப்படியே திரைப்படத்தை தாங்கிப் பிடித்துள்ளார்..
படத்துக்குப்பாளர் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
சைக்கோ கில்லர் கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் அஹமத். நடிகர்களிடம் அருமையாக தேர்வு செய்து வேலை வாங்கியுள்ளார்.
திரைப்படத்தின் இடைவேளைக்கு முன் இருந்த, விறுவிறுப்பும், பரபரப்பும் இடைவேளைக்குப் பின் குறைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மனதளவில் இந்த திரைப்படம் பார்ப்பவர்களை தொந்தரவு செய்யும் காட்சிகள் மட்டுமே தான் இருந்ததே தவிர்த்து,
எந்த விதத்திலும் கனெக்ட் ஆகவில்லை என்பதுதான் உண்மை.
இதுவே இந்த இறைவன் திரைப்படத்திற்கு பெரிய மைனஸ்.
மொத்தத்தில் இறைவன் திரைப்படம் த்ரில்லர் திரைப்படங்களின் ரசிகர்களுக்கு இறைவன் வரம் கொடுத்திருந்தாலும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமே.











