விட்னஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./5

நடிகர் நடிகைகள் :- ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தீபக்.

ஒளிப்பதிவு :- தீபக்.

படத்தொகுப்பு :- பிலோமின் ராஜ்.

இசை :- ரமேஷ் தமிழ்மணி.

தயாரிப்பு :-  பீப்பிள்ஸ் மீடியா பேக்டரி.

தயாரிப்பாளர் :- டிஜி விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா.

ரேட்டிங் :- 3. / 5

தெலுங்கு, மற்றும் கன்னடத் திரைப்பட துறைகளில் மாபெரும் வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா ஃபேக்டரி’, உணர்வுப் பூர்வமான இந்த திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் வைத்து கதை திரைக்கதை அமைத்து “விட்னஸ்” திரைப்படத்தை மிகவும் அருமையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தீபக்.

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை பேசுகிற திரைப்படமாக ‘விட்னஸ்’ திரைப்படம் அமைந்துள்ளது.

டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் இன்று நேரடியாக வெளியாகி இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் ஊழியராக குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் ரோகிணி.

தனது ஒரே மகன் பார்த்திபன் உலகமென்று நினைத்துக் வாழ்ந்து வருகிறார்

தன் தந்தையை இழந்து விட்டதால் தன் தாய் மட்டுமேதான் உலகம் என்று பார்த்திபனும் தனது தாயின் மீது அதிக பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்.

நீச்சல் போட்டியில் திறமையானவனாகவும் மற்றும் குழந்தைகள் நீச்சல் பயிற்சி அளிப்பவராக இருந்து வருகிறார் பார்த்திபன்.

இரவு வேலைக்குச் சென்று வீட்டில் வந்து பார்க்கும் போது பார்த்திபன் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைகிறார் தாய் ரோகிணி.

அப்பார்ட்மெண்ட் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை அடைப்பு எடுத்து சுத்தம் செய்வதற்கு உள்ளே இறங்கும்போது பார்த்திபன் மூச்சுத் திணறி உயிரிழந்து விடுகிறான்.

தனது மகன் பார்த்திபன் இறந்து விட்டான் என செய்தி கேட்டு உறைந்து போகிறார் ரோகிணி.

அப்பார்ட்மெண்ட் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இறந்த தனது ஒரே செல்ல மகன் பார்த்திபன் இழந்துவிட்ட தாய் ரோகிணி, சட்டவிரோதமாக தனது மகனை கூட்டிச்சென்று கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், ரோகினிக்கு உறுதுணையாக வருகிறார்.

இன்னொருபுறம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் அந்த அப்பார்ட்மெண்டில் நடந்த கொலைக்கான சிசிடிவி காட்சிகளை ரோகினியிடம் ஒப்படைக்கிறாள்.

அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், ரோகினியும் தெரிந்த வழக்கறிஞரை சந்தித்து வழக்கு பதிவு செய்து
நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான பதிலடியாக, ரோகினியின் யின் வாழ்விலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்யின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தனது மகனை கொன்றவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்தாரா? கொடுக்கவில்லையா?
வழக்கு என்ன ஆனது, நீதி கிடைத்ததா என்பதுதான் இநத விட்னஸ் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த விட்னஸ் திரைப்படத்தில் ரோகிணி துப்புரவு தொழிலாளியாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்திற்கு எப்படி எல்லாம் நடித்து உயிர் கொடுக்க முடியுமோ அதை அப்படியெல்லாம் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார் ரோகிணி.

கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த வழக்கின் முக்கியமான திருப்புமுனையாகவும் வந்து நிற்கிறார்

தனக்குக் கொடுக்கப்பட்டதை கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத், .

இதில் நடித்த சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஸ்ரீநாத் என ண தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசை மட்டும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் அருமை.

இயக்குனரே ஒளிப்பதிவையும் இயக்கி, காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்

இன்று மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நடந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் தீபக்.

நினைத்து கூட பார்க்க முடியாத க்ளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றை வைத்து திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் தீபக் பாராட்டலாம்.

மொத்தத்தில் விட்னஸ் –
திரைப்படத்தை பார்க்கலாம்.