‘சிங்கப்பூர் சலூன்’ திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சௌத்ரி, ரோபோ சங்கர், கிஷான் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கோகுல்.

ஒளிப்பதிவாளர் :- எம்.சுகுமார்.

படத்தொகுப்பாளர் :- செல்வா ஆர்.கே.

இசையமைப்பாளர் :- ஜாவேத் ரியாஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

தயாரிப்பாளர்கள் :- டாக்டர் ஐசரி கே கணேஷ்.

ரேட்டிங் :- 3.75/ 5.

கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய நண்பன் கிஷன் தாஸ் சிறு வயது முதல் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள்.

கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் பள்ளி செல்லும் நேரங்கள் தவிர மீதி நேரங்களில், லால் நடத்திவரும் சிங்கப்பூர் சலூன் கடையில் தங்களது நேரத்தை கழித்து வருகிறார்.

அந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் கடையில் சிகையலங்காரத்தில் லால் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் கடை எப்போதும் பரபரப்பாக இருப்பது வழக்கம்.

சிங்கப்பூர் சலூன் கடையில் சிகை அலங்காரம் செய்யும்போது அவர் கத்திரிக்கோல் சீப்பு கையாளும் விதமே மிகவும் அருமையாக இருக்கும்.

உலகில் சிறந்த சிகையலங்கார நிபுணராக வேண்டும் என்கிற எண்ணம் கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜிக்கு சிறு வயது முதல்
மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

ஆனால் அவனுடைய பெற்றோர்கள் பொறியியல் படிப்பை படிக்கும்படி கூறுகிறார்கள் ‌

பின்னர் வளர்ந்து பெற்றோர்கள் ஆசைப்படும்படி பொறியியல் கல்லூரி படிக்க வற்புறுத்தியதால் நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிப்பை முடித்ததும், அவரது கல்லூரியிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தனது லட்சியம் சிறந்த சிகையலங்கார நிபுணர் ஆவதுதான் என கல்லூரியில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை தவிர்த்து விடுகிறார்.

கல்லூரியில் ஒன்றாக படித்த தன்து காதலித்த பெண்ணும் சிகை அலங்கார தொழிலை விரும்பாமல், வசதியுள்ள வேறொரு பையனை திருமணம் செய்ய இருப்பதாக கூறி ஆர்.ஜே. பாலாஜியை ஏமாற்றி விடுகிறார்.

எவ்வளவோ எதிர்ப்புகள் எதிர்ப்புகள் வந்தாலும், யார் வேண்டுமானாலும், தான் விரும்பும் வேலையையும் விருப்பப்பட்டு செய்தால் முன்னேறலாம் என்கிற எண்ணத்தோடு முயற்சியை கைவிடாமல் தனது கனவு சிகை அலங்கார நிறுவனராக வேண்டுமென தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் தான் படிக்கும் கல்லூரியில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவி தன்னை விரும்புவதாக கூறும் தன்னை திருமணம் செய்து கொள்வதற்காகவும் தனது நண்பன் கிஷன் தாஸ் மூலம் தெரிய வருகிறது.

அப்படி திருமணத்திற்கு சரி என்று சொல்லி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் தந்தை சத்யராஜ் ஆர்ஜே பாலாஜிக்கு மாமனாராக வருகிறார்.

கதாநாயகன் ஆர் ஜே பாலாஜியின் மாமனாராக சத்யராஜ் மிகவும் கஞ்சத்தனமாகவும் மிகவும் சிக்கனமான மாமனாராக இருக்கிறார்.

கதாநாயகன் ஆர்.ஜே. பாலாஜி சிங்கப்பூர் சலூன் கடையை துவங்கி இந்தியாவிலேயே சிறந்த சிகையலங்கார நிபுணராக ஆனாரா ? இல்லை சிகையலங்கார நிபுணராக வில்லையா? என்பதுதான் இந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சிங்கப்பூர் கலம் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் ஆர்ஜே பாலாஜி ஒரிஜினல் பிராமணராக இருந்தாலும், பார்பர் கதாப்பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருத்தி இருக்கிறார்.

கதாநாயகன் ஆர்.ஜேபாலாஜி சிகை அலங்க கலைஞராக நடித்திருக்கிறார் என்பதைவிட கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இந்த சிங்கப்பூர் சொல்லும் திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி கொடுத்த பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

சத்யராஜ் தனது இயல்பான அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு சத்யராஜின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோ சங்கர் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார் ஆனால் அது எடுபடவில்லை.

திரைப்படத்தில் லால் நடிப்பை மிக மிகப் பெரிய அளவில் பாராட்டியே ஆகவேண்டும்.

மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் சாமி, ஜீவா இயக்குநர் லோகேஷ்கனகராஜ், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவின் மூலம் கதைக் களத்தை மட்டும் அல்லாமல் நடித்திருக்கும் கதாபாத்திரங்களையும் அழகாக காட்டியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, சாதாரணமாக பயணிக்கும் ஒரு கதையை எதிர்பார்ப்புடன் பயணிக்கும்படி காட்சிகளை படத்தொகுப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விவேக்- மெர்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.

இயக்குநர் கோகுல், தனது பாணியில் திரைப்படத்தை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், தான் சொல்ல வந்த கருத்தையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டும்படி உள்ளது.

மொத்தத்தில் – இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பதோடு முன்னேற்ற பாதையில் செல்லும் துடிக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையும் தருகிறது.

error: Content is protected !!