அநீதி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.
நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், பரணி, ஷா ரா, அறந்தாங்கி நிஷா, சாந்த தனஞ்செயன், டி.சிவா, ஜே எஸ் கே சதீஷ்குமார் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜி.வசந்தபாலன்.
ஒளிப்பதிவு :- எட்வின் சகே.
படத்தொகுப்பு :- ரவிக்குமார்.எம்.
இசை :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன்.
ரேட்டிங் :- 2.5./ 5.
மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் அர்ஜுன் தாஸ் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டு தனது நண்பர்களுடன் வசித்து வருகிறார்.
தினசரி தான் டெலிவரி செய்யும் வீடுகளில் பல்வேறு அவமானங்களுக்கு இடையே உணவு டெலிவரி செய்து வருகிறார்.
இதனால் தன்னை அவமானப்படுத்துபவர்களை பார்த்தால் அடிக்கடி கோபம் வரும் சுபாவம் கொண்ட கதாநாயகன் அர்ஜுன் தாஸ் அந்த கோபத்தை வெளிக்காட்டாமல் அந்த நபரைக் கொல்வது போன்றும் அடிப்பது போன்றும் தனக்குள்ளே நினைத்து கோபத்தை அடக்கிக் கொள்கிறார்.
இதனாலேயே அவருக்கு ஓசிடி என்னும் மன நோய் ஏற்படுகிறது.
இதற்காக கதாநாயகன் அர்ஜுன் தாஸ் ஒரு மனநல மருத்துவரை அணுகி ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார்.
கதாநாயகி துஷாரா விஜயன் ஒரு பணக்கார வீட்டில் இந்த வீட்டில் உள்ள வயதான எஜமானி பாட்டியை கவனித்து கொண்டு வீட்டோட தங்கி வேலை பார்த்து வருகிறார்.
ஒரு நாள் கதாநாயகன் அர்ஜுன் தாஸ் அந்த வீட்டிற்கு உணவு டெலிவரிக்காக செல்லும் போது கதாநாயகி துஷாரா விஜயனை பார்த்து காதல் வயப்படுகிறார்.
அன்று முதல் அந்த வீட்டிற்கு யார் உணவு டெலிவரிக்காக சென்றாலும் அதை வாங்கி கதாநாயகன் அர்ஜுன் தாஸ் டெலிவரி செய்து தனது காதலை வளர்த்துக் கொள்கிறார்.
காதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் செல்கிறது.
கதாநாயகி துஷாரா விஜயன் கவனித்து வரும் வயதான எஜமானி பாட்டி திடீரென இறந்துவிடுகிறார்.
கதாநாயகி துஷாரா விஜயன் மட்டுமே அந்த வீட்டில் இருந்து பாட்டியை கவனித்து வருவதால் எல்லோருக்கும் கதாநாயகி துஷாரா விஜயன்தான் கொலை செய்திருப்பார் என சந்தேகம் எழுகிறது.
இறுதியில் வயதான எஜமானி பாட்டியை கொன்றது யார்? என கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? கதாநாயகி துஷாரா விஜயனும், கதாநாயகன் அர்ஜுன் தாஸும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா? என்பதுதான் இந்த அநீதி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அநீதி திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அர்ஜுன் தாஸ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
கதாநாயகன் அர்ஜுன் தாஸின் குரல் மற்றும், தோற்றமும் உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்திற்கு மிகவும் நன்றாக பொருந்தியுள்ளது.
கோபம் காதல் எமோஷன் என அனைத்திலும் அளவான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்த அநீதி திரைப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
கதாநாயகி துஷாரா விஜயன் தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் அர்ஜுன் தாஸ் தந்தையாக நடித்திருக்கும் காளிவெங்கட் சிறிது நேரம் காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கும் அளவிற்கு நடித்துள்ளார்.
காலி வெங்கடின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொருவரின் தந்தையை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பாட்டியின் மகளாக வரும் வனிதா விஜயகுமார் திமிரான நடிப்பால் அசத்தியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் சிதம்பரம், பரணி, ஷா ரா, அறந்தாங்கி நிஷா, சாந்த தனஞ்செயன், டி.சிவா, ஜே எஸ் கே சதீஷ்குமார் அனைவரும் ரக பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் பாடியாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பிண்ணனி இசை அனைத்தும் அருமை.
உழைக்கும் வர்க்கத்திற்கு முதலாளிகளால் இழைக்கப்படும் அநீதிக்கு என்ன தீர்வு? என்பதை பேசும் திரைப்படமாக இந்த காலக்கட்டத்தில் மக்கள் அதிகம் சமாளிக்கும் மன அழுத்தத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.
மொத்தத்தில் அநீதி திரைப்படம் எழை எளியவர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக உரக்க குரல் கொடுத்திருக்கிறார்.











