Wednesday, July 15
Shadow

Tag: நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் அன்று ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..

நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் அன்று ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..

சினிமா - செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "ஜகமே தந்திரம்" இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கடந்த மே 1-ம் தேதி "ஜகமே தந்திரம்" திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இந்த "ஜகமே தந்திரம்" திரைப்படத்தை வெளியீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28-ம் தேதி ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்....
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நடிகர் தனுஷ் பர்த்டே COUNT DOWN தேவையா…?

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு நேரத்தில் நடிகர் தனுஷ் பர்த்டே COUNT DOWN தேவையா…?

சினிமா - செய்திகள்
ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தமைக்காக இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ். இவருக்கு தமிழகத்தில் மிக அதிகமாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் தனுஷ் திரைப்படங்களை கொண்டாடுவது முதல் அவரின் பிறந்தநாளையும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர். வருகிற ஜீலை மாதம் 28ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதற்கு இன்னும் 97 நாட்கள் உள்ளது. ஆனால் தற்போதே நடிகர் தனுஷ் பிறந்தநாளை கொண்டாட கவுன் டவுனை தொடங்கிவிட்டனர் இவரது ரசிகர்கள். 100 நாட்கள் உள்ளது என தொடங்கி 99.. 98 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைன் செய்து இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று, ஊரடங்கு உத்தரவு என மக்கள் அவதிப்படும் வரும் வேளையில் நடிகர் தனுஷ் ...
சிலம்பரசன் – தனுஷ் – இயக்குனர் மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கே கணேஷ்.?

சிலம்பரசன் – தனுஷ் – இயக்குனர் மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கே கணேஷ்.?

சினிமா - செய்திகள்
எல்கேஜி, கோமாளி  சீறு உள்ளிட்ட படங்களை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார் ஐசரி கே கணேஷ். இந்நிறுவனம் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு திரைபபடத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதில் தனுஷ் மற்றும் சிலம்பரசன்S.T ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும். இந்தக்கதையை தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவி செய்வதற்காக நடிகர் விஷால் மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தேர்வு செய்து வைத்திருந்தனர். அந்த படத்திற்கு வெள்ள ராஜா கருப்பு ராஜா என்று பெயரிட்டு இருந்தனர். பிரபு தேவா இத்திரைப்படத்தினை இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது....
புதுப்பேட்டை 2 தனுஷ் ரசிகர்கள்  உற்சாகத்தில் இருக்கிறார்கள் இயக்குனர் செல்வராகவன்

புதுப்பேட்டை 2 தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் இயக்குனர் செல்வராகவன்

சினிமா - செய்திகள்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படைப்புகளை கொடுத்தவர் செல்வராகவன். ஆனால் செல்வராகவன் & சூர்யா இணைந்த NGK உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இதனால் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செல்வராகவன். இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் அடுத்தப்படம் குறித்து மாணவர்கள் கேட்டனர். தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க உள்ளேன், என அறிவித்தார். இதைக்கேட்டு மாணவர்கள் & செல்வா ரசிகர்கள் உற்சாகமாகினர் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணையவில்லை் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது....
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கர்ணன்’.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கர்ணன்’.

சினிமா - செய்திகள்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத் தலைப்பு தொடர்பாக கே. சந்திரசேகரன், தலைவர், சிவாஜி சமூகநலப்பேரவை சேர்ந்தவர் தன் கருத்தை பதிவிட்டுள்ளார் அதில்… “கர்ணன்” – இந்தப் பெயர் மகாபாரதக் கதாபாத்திரம் மட்டுமல்ல, நடிகர்திலத்தின் தோற்றம், கம்பீரம், நடை என்று பல பரிமாணங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய திரைப்படம். இன்று, ஏதோ ஒரு கதைக்கு “கர்ணன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நமது கண்டனத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, திரைப்படப் பெயர்களை பதிவு செய்யும், தமிழ் பிலிம் சேம்பர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறோம். ஆனாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வார இதழில் தனுஷ் நடிக்கும் “கர்ணன்”: திரைப்படத்தைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி வெளிய...
கோடையை தெறிக்க விட வரும் திரைப்படங்கள் தளபதி விஜய் சூர்யா சியான் விக்ரம் தனுஷ்

கோடையை தெறிக்க விட வரும் திரைப்படங்கள் தளபதி விஜய் சூர்யா சியான் விக்ரம் தனுஷ்

சினிமா - செய்திகள்
தீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். படமே பார்க்காதவர்கள் கூட கோடை விடுமுறையில் நிச்சயம் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்காக பெரிய படங்களை வெளியிட காத்திருப்பர் தயாரிப்பாளர்கள். இந்தாண்டு 2020 கோடை விடுமுறையில் தளபதி விஜய், நடிகர் சூர்யா, தனுஷ், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் சியான் விக்ரம் ஆகியோரத்து திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் மே மாதம் முதல் தேதியில் வெளியாவதாக அ...
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வந்த கொலை மிரட்டல்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வந்த கொலை மிரட்டல்

சினிமா - செய்திகள்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பேசுவதாக ஒரு வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர், எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது. வெட்டிக்கொலை செய்வோம் என்று நடிகர் தனு‌ஷ், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது தென்மாவட்டங்கள் முழுவதும் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது....