‘தாய் கிழவி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபேக்கா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சிவகுமார் முருகேசன்.
ஒளிப்பதிவாளர் :- விவேக் விஜயகுமார்.
படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.
இசையமைப்பாளர் :- நிவாஸ் கே. பிரசன்னா.
தயாரிப்பு நிறுவனம் :- பேஷன் ஸ்டுடியோஸ் & சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுதன் சுந்தரம் & சிவகார்த்திகேயன்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா ( D ONE )
ரேட்டிங் :- 3.5./5.
தன்னுடைய கணவனை இழந்த தாய் கிழவி கதையின் நாயகி ராதிகா தனது கடின உழைப்பால் தனக்காக சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, மட்டுமல்லாமல் அந்த சொத்து அனைத்தையும் தனது மகன்கள் மற்றும் மருமகளுக்கும் கொடுக்காமல் தான் உயிர் இருக்கும் வரை தன்னுடைய சொத்து அனைத்தையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் வட்டிக்கு பணம் கொடுப்பது கொடுத்த அந்த பணத்தை, மிகவும் கராராக பேசி வசூலிப்பதில் மிகப்பெரிய பேர்வழி என்பதால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருமே அவரை பார்த்தாலே பயப்படுவது மற்றும் அச்சப்படுவதோடு, கதையின் நாயகி ராதிகா எப்போது இறந்து போவார் என்ற எண்ணத்தோடு அந்த கிராமத்து மக்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
அதேபோல், அவரது மூன்று மகன்களும், மூன்று மருகனும் கதையின் நாயகி ராதிகாவின் அனைத்து சொத்துக்காக அவருடைய மறைவை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திடீரென்று கதையின் நாயகி ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடும் நிலையில் ஊர் மக்களும், அவரது சொந்த பந்தங்களும் கதாநாயகி ராதிகாவின் இறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, ஒரு நகைக்கடையின் முதலாளி மூலம் அவர் ஒரே சமயத்தில் 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் கதையின் நாயகி ராதிகாவின் மகன்கள் சிங்கம்புலி அருள்தாஸ் பால சரவணன் மூவருக்கும் தெரிய வருகிறது.
கால காலமாக அந்த கிராமத்தின் வழக்கப்படி, ஒரு குடும்பத்தில் தாய் இறந்த பிறகு வீடு, மற்றும் நிலம் அனைத்தும் பெற்ற மகன்களுக்கும், அவருடைய நகைகள் அனைத்தும் பெண் பிள்ளைக்கு சேர வேண்டும் என்பதால், தன் தாயின் இறப்பை தள்ளி வைத்து, அந்த 160 பவுன் நகையை பற்றி யாருக்கும் தெரியாமல் நகைகள் அனைத்தையும் கைப்பற்றி மூன்று மகன்களும் பிரித்துக் கொள்ள திட்டம் போடுகிறார்கள்.
கதையின் நாயகி ராதிகாவின் இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது மூன்று மகன்கள், சிங்கம்புலி அருள்தாஸ் பால சரவணன் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கதையின் நாயகி ராதிகாவின் மகன்கள் சிங்கம்புலி அருள்தாஸ் பால சரவணன் இவர்கள் மூவரும் நினைச்சது போல் கதையின் நாயகி ராதிகா உயிர் பிழைத்தாரா?, உயிர் பிழைக்கவில்லையா?,
கதையின் நாயகி ராதிகாவின் மகன்கள் சிங்கம்புலி அருள்தாஸ் பால சரவணன் இவர்கள் மூவரும் நகைகளை கைப்பற்றினார்களா ? நகைகளை கைப்பற்றவில்லையா?, என்பதுதான் இந்த‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தாய் கிழவி திரைப்படத்தில் கதையின் நாயகியாக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார்.
பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், தைரியம், திமீர், பெண்களின் தன்னம்பிக்கை ஆகியவற்றை தனது அதீதமான நடிப்பின் மூலம் மிகச்சிறப்பாக தாய் கிழவி என்ற அந்த கதாபாத்திரத்தின் ஆன்மாவாக பயணித்து உள்ளார்.
ராதிகா, கிராமத்து உழைக்கும் பெண்மணியாக தனது தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் அவருடைய ஒப்பனை, கதாபாத்திரத்தின் மேனரிசம் மற்றும் உடல்மொழி ஆகியவை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மண் சார்ந்த வாழ்வியலை மிகச் சரியாக வெளிப்படுத்த இருக்கிறார்.
கதையின் நாயகி ராதிகாவின் மகன்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களுடைய வழக்கமான நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு மூலம் தென் தமிழக கிராமத்து மண்ணையும், மண் சார்ந்த மக்களையும் மிகவும் சிறப்பாக காட்சி படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், சிறப்பாக இருக்கிறது.
பெண்கள் சுயமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்ற கருத்தை கிராமத்து மூதாட்டி ஒருவரின் மூலம் சொல்ல முயற்சித்திருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.
மொத்தத்தில், ‘தாய் கிழவி’ சிறப்பு.











