வில் திரைப்பட விமர்சனம்

நடிகர் நடிகைகள்:- விக்ராந்த், சோனியா அகர்வால், அலக்கியா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- S சிவராமன்.

ஒளிப்பதிவாளர் :- TS பிரசன்னா.

படத்தொகுப்பாளர் :- G தினேஷ்.

இசையமைப்பாளர் :- சௌரப் அகர்வால்.

தயாரிப்பு நிறுவனம் :- புட் ஸ்டப் புரொடக்ஷன்ஸ், கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- சிவராமன்.

ரேட்டிங் :- 2./5.

இசையில் அதிக ஆர்வம் உள்ள தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உயில் எழுதி வைக்கிறார்.

அதே சமயம், தொழிலதிபர் தங்கி இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அப்பார்ட்மெண்டை அலக்கியா என்ற பெயரில் உயிர் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

தொழிலதிபரின் மகன்கள் யார் என்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு தனது தந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அப்பார்ட்மெண்டை எதற்காக எழுதி வைத்தார் அந்த பெண்ணிடமிருந்து அப்பார்ட்மெண்டை எப்படியாவது அபகறிப்பதற்காக வேறு ஒரு பெண்ணை அலக்கியா என்று கூறி தொழிலதிபரின் மகன்கள் நீதிமன்றத்தில் ஆளை மாற்றி நிறுத்துகிறார்கள்.

ஆனால், அந்த பெண் மீது சந்தேகமடையும் நீதிபதி கதாநாயகி சோனியா அகர்வால், இந்த வழக்கின் உண்மையை விசாரிக்கும் பொறுப்பை நீதிமன்ற காவல்துறை உதவி ஆய்வாளரான கதாநாயகன் விக்ராந்திடம் ஒப்படைக்கிறார்.

இந்த நிலையில் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை உதவி ஆய்வாளரான கதாநாயகன் விக்ராந்த் உண்மையான அலக்கியாவை கண்டுபிடித்தாரா ?, கண்டுபிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘வில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வில் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அலக்கியா, சாதாரண முகமாக இருந்தாலும் பலவித உணர்வுகளை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகவும் அருமையாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சிவராமன்.

மொத்தத்தில், ‘வில்’ திரைப்படம் ?

error: Content is protected !!