‘க்ராணி” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி, கஜ ராஜா, அனந்து நாக், அபர்ணா, மாஸ்டர் கன்ஷ்யாம், பேபி சாண்ட்ரா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விஜய குமரன்.
ஒளிப்பதிவாளர் :- ஏ.மணிகண்டன்.
படத்தொகுப்பாளர் :- எம்.எஸ். கோபி.
இசையமைப்பாளர் :- டாக்டர் செல்லையா பாண்டியன்.
தயாரிப்பு நிறுவனம் :- விஜய் மேரி யுனிவர்சல் மீடியா.
தயாரிப்பாளர் :- டி.விஜயமேரி.
ரேட்டிங் :- 3.5./5.
அந்த குழந்தையை கொன்றது யார்? மிருகமா? மனிதரா? என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகளான திலிபன், சிங்கம்புலி விசாரனையை துவக்கி ஆராய்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பிய ஒரு இளம் தொழில்நுட்ப தம்பதியினர், கணவர் அனந்து நாக், மனைவி அபர்ணா, மகன் மாஸ்டர் கன்ஷ்யாம், மகள் பேபி சாண்ட்ரா, தங்களது மூதாதையர் வாழ்ந்த பரம்பரை அரண்மனை போன்று உள்ள மச்சி வீட்டை ஆல்டர் செய்து வசிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஊர்த்தலைவர் கஜராஜ் உதவியுடன் இந்த சூழ்நிலையில் அந்த அரண்மனை போன்று உள்ள மச்சி வீட்டிற்கு மிகவும் வயதான பாட்டியாக இருக்கும் வடிவுக்கரசி வருகிறார்.
மிக மிக வயதான பாட்டியாக இருக்கும் வடிவுக்கரசி தன் கணவனை போனறு என்றும் இளமையாக இருக்க மூன்று குழந்தைகளின் இதயத்தையும் அபூர்வ பூவையும் சமைத்து சாப்பிட்டால் என்றென்றும் இளமையாக இருக்கலாம் என்பதால் மச்சி வீட்டில் உள்ள கணவர் அனந்து நாக், மனைவி அபர்ணா, மகன் மாஸ்டர் கன்ஷ்யாம், மகள் பேபி சாண்ட்ரா, அந்த இரு குழந்தைகளையும் கொன்று அவர்களின் இதயத்தை சமைத்து சாப்பிட திட்டமிடுகிறாள்.
இந்த வயதான பாட்டி வடிவுக்கரசியின் திட்டத்தை விசாரணை மூலம் தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளான திலீபன், சிங்கம்புலி வடிவுக்கரசியின் திட்டத்தை முறியடித்து அந்த குழந்தைகளை காப்பாற்றனார்களா? காப்பாற்ற வில்லையா? வயதான பாட்டியான வடிவுக்கரசியின் முடிவு என்ன? என்பதுதான் இந்த க்ரானி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘க்ரானி’ திரைப்படத்தில் கதையின் மைய புள்ளியாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்.
மிகவும் வயதான பாட்டியாக வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை கொடுத்து மிரட்டியுள்ளார்.
காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலீபன், காவலர் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி இருவரின் நடிப்பும் திரைப்படத்திற்கு சிறப்பு.
ஊர்த் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜராஜ் சிறப்பாக நடித்துள்ளார்.
இளம் தம்பதியர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனந்து நாக், அபர்ணா, குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கன்ஷ்யாம், பேபி சாண்ட்ரா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஏ.மணிகண்டனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் :- டாக்டர் செல்லையா பாண்டியன் இசையில் பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் இயக்குநர் விஜய குமரன்.
மொத்தத்தில், ‘க்ரானி’ அருமையான கிரைம் திரில்லர் வித்தியாசமான திரைப்படம்.











