‘கிட்டி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அசோக் குமார், அரவிந்த் ராஜ், யுகன், ஓய்.ஜி.மகேந்திரன், நிஷா, சங்கவி, சிமு அத்வானி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  நெடுமாறன் மோகன்தாஸ்.

ஒளிப்பதிவாளர் :- -வி.எஸ்.வேலன்.

படத்தொகுப்பாளர் :- கார்த்திக் பாண்டியன்.

இசையமைப்பாளர் :- காதர்.

தயாரிப்பு நிறுவனம் :- ரியா கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- திருமாறன்.

மக்கள் தொடர்பு :- சரண்.

வெளியீட்டு தேதி :-  02  அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  2./5.

கதாநாயகன் அசோக்குமார்  தன்னுடைய காதலியை கொலை செய்ததாகவும், தன்னை கொலை செய்ய வந்த ஒரு நபரை கொன்றதாகவும் காவல்நிலையத்தில் சென்று சரணடைகிறார்.

இரண்டு கொலைகளையும் தான் செய்ததாக கதாநாயகன் அசோக் குமார் ஒப்புக்கொண்டாலும், இந்த இரண்டு கொலை  வழக்கின் பின்னணியில் வேறு சில உண்மைகள் இருப்பதை காவல்துறையினருக்கு வழக்கு விசாரணையில்  தெரியவருகிறது.

கதாநாயகன் அசோக் குமார்  உண்மையில் இரண்டு கொலையும் செய்தாரா?, செய்யவில்லையா?, என்பதுதான் இந்த ‘கிட்டி, திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தக் ‘கிட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக்குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும்  அசோக்குமார் திரைப்டத்தின் முக்கிய பலமாக இருக்கிறார்.

விஜய் கதாபாத்திரத்தின் கொலை பல்வேறு உணர்வுகளையும், அதன்  மர்மத்தையும் தனது நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக  வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த ‘கிட்டி’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக சங்கவி, நிஷா மற்றும் சிமு அத்வானி நடித்துள்ளார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் சங்கவி, நிஷா மற்றும் சிமு அத்வானி கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  யுகன், கதாபாத்திரத்தின் காவல்துறை அதிகாரிக்கான  கம்பீரமும் உடல் மொழியும் வசன உச்சரிப்பு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி. மகேந்திரன் வழக்கம்போல் தனது அனுபவத்தை பயன்படுத்தி கதாபாத்திரத்தை இயல்பாகக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த கிட்டி திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வி.எஸ். வேலனின் ஒளிப்பதிவு, மூலம் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் காதரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்தின் உணர்வுகளுக்கும் சஸ்பென்ஸ் காட்சிகளுக்கும் துணையாக இருக்கிறது.

ஒரு கொலை வழக்கை மட்டுமே மையமாக வைத்து மர்மத்தை உருவாக்கும் விதமும், கதையின் உண்மையை உடனடியாக சொல்லாமல் படிப்படியாக தகவல்களை வெளிப்படுத்தும் முறையும் பார்வையாளர்களின் கவனத்தை இருக்கும் வகையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ்.

மொத்தத்தில், ‘கிட்டி’ திரைப்படம் ஒரு முறை பார்கலாம்.

error: Content is protected !!