தளபதி நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் மற்றும் தடைகள் 30 ஆண்டு காலம் கடந்து வந்த பாதை.!

சென்னை 04 டிசம்பர் 2022  தளபதி நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் மற்றும் தடைகள் 30 ஆண்டு காலம் கடந்து வந்த பாதை.!

புதிய கீதை திரைப்படத்திற்கு 2003 ஆண்டு பெயருக்காக ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் கே பி ஜெகன் இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் நடித்த ‘கீதை’ திரைப்படத்திற்கு கீதை என்று பெயர் வைக்கக்கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பிறகு ‘புதிய கீதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காவலன் திரைப்படத்திற்கு 2011 ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் நடித்த ‘சுறா’ திரைப்படத்திற்கான நஷ்ட ஈடு தொகையை நடிகர் விஜய் கொடுத்ததைத் தொடர்ந்து ‘காவலன்’ திரைப்படம் வெளிவந்தது.

துப்பாக்கி திரைப்படத்திற்கு 2012 ஆண்டு பெயருக்காக ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்ததுப்பாக்கி’ திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ திரைப்படக் குழுவினர் வழக்கு தொடர்ந்தார்கள்.

தலைவா திரைப்படத்திற்கு 2013 ஆண்டு பெயருக்காக ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்திற்கு
திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மர்ம கடிதம் வந்ததாகக் கூறி, அரசு தடை விதித்தது பின்பு, ‘டைம் டூ லீட்’ வாசகம் நீக்கப்பட்டு 11 நாட்கள் கழித்து தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டது.

கத்தி திரைப்படத்திற்கு 2014 ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இலங்கை ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் தயாரித்திருந்ததாக கூறி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி நடிகர் விஜய் நடித்த கத்தி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சில தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புலி திரைப்படத்திற்கு 2015 ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் முதல்நாள் அதிரடி சோதனை நடத்தியதால், ‘புலி’ திரைப்பட அதிகாலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு தாமதமாக திரையிடப்பட்டது.

தெறி திரைப்படத்திற்கு 2016 ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தை மினிமம் கேரண்டி முறையில் வாங்கக் கூறி வற்புறுத்தப்பட்டதாலும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

மெர்சல் திரைப்படத்திற்கு 2017 ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘
மெர்சல்’ திரைப்படம் வெளியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ்
கொடுக்கப்படாமல் இருந்தது.

தளபதி விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்கார் திரைப்படத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்ட சிக்கல்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பிகில் திரைப்படத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது தளபதி விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டது.

அந்த போஸ்டரில் உள்ள காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் நடைபெற்று வந்தபோது, விஜய்யின் வீடு, மற்றும் அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடந்தது

பீஸ்ட் திரைப்படத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கல்.

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ‘கே.ஜி.எஃப். இரண்டாம் பாகம்’ திரைப்படம் வெளிவந்த காரணமாக ஏப்.13-ம் தேதி திரைப்படம் வெளியானது.

வாரிசு திரைப்படத்திற்கு 2023 ஆம் ஆண்டு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தின் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது.

ஆனால் ஆந்திரா, தெலங்கானாவில் ‘வரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு அங்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

நடிகர் தளபதி விஜய் தமிழ் திரைப்பட உலகில் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.

31 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தளபதி நடிகர் விஜய் இனி வரும் காலங்களில்  அனைத்து திரைப்படத்திற்கு எந்த ஒரு எதிர்ப்பும் சிக்கலும் இல்லாமல் வெளிவர வேண்டும் என மூவி விங்ஸ இணையதளம் சார்பாக தளபதி விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.