‘தணல்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  அதர்வா, அஷ்வின் கக்குமனு, லாவன்யா திரிபாதி,  ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி ப்ரியா, பாரத், சோனியா போஸ் வெங்கட், பிரதீப் ஆர் விஜயன், செல்வா, தௌபிக், சர்வா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரவீந்திர மாதவா.

ஒளிப்பதிவாளர் :- சக்தி சரவணன்.

படத்தொகுப்பாளர் :- ஆர். கலைவாணன்.

இசையமைப்பாளர் :- ஜஸ்டீன் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :- அன்னை ஃபிலிம் புரொடக்சன்.

தயாரிப்பாளர் :-  எம்.ஜான் பீட்டர்.

ரேட்டிங் :- 3.5./5.

கதாநாயகன் அதர்வா முரளி, காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு சேருவதற்கு அந்த ஏரியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு தன்னுடைய வேலைக்கான அப்பாயிண்ட்ன்மெண்ட் ஆர்டரை பெற்று கான்ஸ்டபிள் பணியில் சேர்வதற்காக, கதாநாயகன் அதர்வா முரளியுடன் சேர்ந்து ஐந்து பேரும் கான்ஸ்டபிள் பணியில் சேர்வதற்காக அதே காவல் நிலையத்திற்கு வருகிறார்கள்.

காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளருக்காக  கதாநாயகன் அதர்வா முரளி மற்றும் ஐந்து பேரும் காலை முதல் மாலை வரை  காத்திருக்கிறார்கள்‌.

இந்த நிலையில், அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் இவர்கள் ஆறு பேரையும் அந்த ஏரியாவில் உள்ள பகுதிக்கு ரவுண்ட்ஸ் செல்லுமாறு கூறுகிறார்.

காவல்துறை துணை ஆய்வாளர் கூறியதால் அந்த ஆறு பேரும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அந்த பகுதிக்கு ரவுண்ட்ஸ் செல்கின்றனர்.

அந்தப் பகுதிக்கு ரவுண்ட்ஸ் செல்லும்போது, பாதாள சாக்கடை மூடியினைத் திறந்து கொண்டு ஒருவன்,  கான்ஸ்டபிளை கண்டதும் தலைதெறிக்க ஓடி விடுகிறான்.

அவன் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு கதாநாயகன் அதர்வா முரளி மற்றும் ஜந்து  கான்ஸ்டபிள், அவன் மீது சந்தேகம் பட்டு  அவனை பின் தொடர்ந்து  துரத்திக் கொண்டு செல்கின்றார்கள்.

ஒரு மிகப்பெரும் மதில் சுவரை  தாண்டி குதித்து ஓட, பின் தொடர்ந்து ஆறு பேரும் அந்த மதில் சுவரை தாண்டுகின்றனர்.

துரத்தி சென்ற கதாநாயகன் அதர்வா முரளி மற்றும் ஜந்து கான்ஸ்டபிள்,உள்ளே சென்றால், துரத்தி வந்த அந்த நபர் மாயமாகி விடுகிறான்.

உள்ளே சென்று பார்த்தால் குடிசை பகுதியாக உள்ள நிலையில் அந்த குடிசை பகுதியில் ஒருவர் கூட தங்கி இருக்க வில்லை இது வந்த வழி எது வெளியில் செல்லும் வழி எது  எதுவும் தெரியாமல் ஆறு பேரும். திகைத்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில், அங்கு வரும் அஷ்வின் கக்குமனு உட்பட மூன்று பேர் நிற்க, அவர்களை யார் என்று விசாரிக்க அருகில் செல்கிறார் காவலர் பரணி. விசாரித்து கொண்டிருக்கும் போதே அஷ்வின் கக்குமனு தன் கையில் மறைத்து வைத்திருந்த மிகப்பெரும் கத்தியை எடுத்து பரணியின் தலையை துண்டித்து  விடுகிறார்.

இதனைக் கண்டு கதாநாயகன் அதர்வா மற்றும் ஐந்து காவலர்களும் அதிர்ச்சியாகிறார்.

இவர்கள் அனைவரையும் அஷ்வின் கக்குமனு ஆட்கள் கொலை செய்வதற்காக கொலை வெறியுடன் துரத்துகிறார்கள்.

அனால் இந்த அஷ்வின் கக்குமனு கும்பலின் கொலை வெறி தாக்குதலை நடத்த நோக்கம் என்ன? கதாநாயகன் அதர்வா மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் உயிர் தப்பினார்களா? உயிர் தப்பவில்லையா?  என்பதுதான் இந்த தணல் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘தணல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அதர்வா முரளி, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஒரு சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுக்காமலும் கதாநாயகன் அதர்வா முரளி காதல் காட்சிகளில் நன்றாகவே மிளிர்கிறார்

வில்லன் கதாபாத்திரம் என்று சொல்வதை விட மற்றொரு கதாநாயகன் என்று தான் சொல்லியாக வேண்டும் அஷ்வின் கக்குமனு.

நடிகர் அஷ்வின் கக்குமனு இதுவரை நடித்த திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்த இவர் எந்த திரைப்படத்திலும் இல்லாத அளவிற்கு இவரைக் கண்டாலே திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு பயத்தை வர வைக்கும் அளவிற்கு அஷ்வின் கக்குமனு. ஒரு வில்லத்தனத்தைக் கொடுத்து தனது நடிப்பின் முலம் மிரட்டியிருக்கிறார்.

இந்தத் தணல் திரைப்படத்தில் கதாநாயகியாக லாவன்யா திரிபாதி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும், லாவன்யா திரிபாதி தனது அழகால் காட்சிகளை மிக அழகாக வந்து அழகுப்படுத்தியிருக்கிறார்.

இந்த தணல் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு மூலம் இரவு நேர காட்சிகளில் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜஸ்டீன் பிரபாகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்ப் காட்சியிலிருந்து இடைவேளை வரையிலும் காட்சிகளுக்கு காட்சி பரபரப்பாகச் சென்று நம்மை சீட்டில் நுனியில் அமர வைத்த இயக்குநர் இரண்டாம் பாதியில், அஷ்வின் கக்குமனு, ப்ளாஷ் பேக் காட்சிகளில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் .

நம் நாட்டில் பல்வேறு இடங்களில் விவசாயம் எதனால் அழிந்தது என்பதையும் கூறாமல் இல்லை.
ஆனால், கதை சொன்ன  விதத்தில் சற்று இயக்குநர் தடுமாறியிருக்கிறார் .

வங்கிகளை மாணவர்கள் சேர்ந்து  கொள்ளையடிப்பது, மாணவர்களின் கைகளில் கைத்துப்பாக்கி, காவல்துறை தங்களுடைய  முதல் எதிரி என்று முன்னிறுத்துவது உள்ளிட்ட பல காட்சிகள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விதத்தில் சொல்லியிருப்பதால் படத்தின் மீது பெரிதாகவே ஒன்றி விட முடியவில்லை கதைக்குள் நம்மால் ஒட்ட முடியாமல் போய்விடுகிறது.

மொத்தத்தில் தணல் திரைப்படம் பரபரப்பாக உள்ளது.

error: Content is protected !!