“காயல்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் நடிகைகள்:- அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக்,
ஸ்வாகதா, ஐசக், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தமயந்தி..
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன்.
இசையமைப்பாளர் :- ஜஸ்டின்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜெ ஸ்டுடியோ.
தயாரிப்பாளர் :- ஜேசு சுந்தரமாறன்.
ரேட்டிங் :- 2.5/5.
கதாநாயகன் லிங்கேஷ், கடல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு சமூகப் போராளியாகவும் ஆனால் தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருக்கிறார்.
கதாநாயகன் லிங்கேஷ், கதாநாயகி காயத்ரிக்கும் காதல் உருவாக, காவல்துறை துணை ஆணையாளர் இருக்கும் காயத்ரியின் தந்தை ஐசக், இருவருடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டு விடுகிறார்.
ஆனால் சாதி வெறி பிடித்த கதாநாயகி காயத்ரியின் தாய் அனுமோல், அந்தக் காதலை எதிர்ப்பதுடன் தனது மகள் கதாநாயகி காயத்ரிக்கு தங்களது சாதியில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க, எதிர்பாராத விதமாக இறந்துவிட தனது மகளை உயர்ந்த தூக்கத்தில் உருக்குலைந்து போகும் தந்தை ஐசக் தாய் அனுமோல் அனைவருக்கும் மனதளவில் கணவன் மனைவி உறவே மிகவும் சிக்கலாகிப்போக, இருவரையும் ஒன்றிணைக்க அவர்களின் குடும்ப நண்பரான மனநல மருத்துவர் ரமேஷ் திலக், கதாநாயகி காயத்ரியின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க இந்தப் பயணத்தின் நினைத்து வைக்கலாம் என சுற்றுப்பயணத்தை மனநல மருத்துவர் ரமேஷ் திலக், ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.
கதாநாயகி காயத்ரி அத்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்லும் சுற்று பயணத்தில் கணவர் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா?
என்பதுதான் இந்த “காயல்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “காயல்” திரைப்படத்தில் கதாநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் முன்னாள் காதலி கதாநாயகி காயத்ரியின் நினைவிலேயே காலத்தைக் கழிக்கும், தன்னோட அலுவலகத்தில் பணி புரியும் ஸ்வாகதாவின் காதலை ஏற்க முடியாமல் தவிப்பதும் முன்னாள் காதலியின் நினைவோடு வாழ்வதும் இரண்டிலும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த “காயல்” திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரியின நடிப்புக்கும் அழகுக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காதலனின் பரிவும் அப்பாவின் அன்பும் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந் “காயல்” திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்வாகதா மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் திலக் கதாநாயகி காயத்ரியின் தந்தை கதாபாத்திரத்தில் எடுத்திருக்கும் ஐசக் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுமோல் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவு மூலம் கடல்கரை ஒரம் தண்ணீர் வெளிகளும், வாழ்வியலும் , இயற்கை சூழலும் தாழவும் மேலாகவும் தண்ணீருக்கு மேல் பறவைகள் பறக்கும் காட்சிகளும் கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் இசையில் பாடல்கள் மற்றும் கதையை எந்த விதத்திலும் இடஞ்சல் செய்யாத அளவிற்கு பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது.
இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் கதையிலும் திரைக்கதையிலும் வசனங்களிலும் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருந்தால் சிறப்பான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த “காயல்” திரைப்படத்தை ஒரு முறை திரையரங்கில் சென்று பார்க்கலாம்.











