தி ஸ்மைல் மேன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சரத்குமார், சிஜா ரோஜா, கலையரசன், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன், குமார், ஜார்ஜ் மரியன், பேபி ஆழியா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷயாம் – -பிரவீன்.

ஒளிப்பதிவாளர் :- விக்ரம் மோகன்.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- கவாஸ்கர் அவினாஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- மேக்னம் மூவிஸ்.

தயாரிப்பாளர்கள் :- சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி.

ரேட்டிங்:- 2.5./5.

சிபிசிஐடி அதிகாரியான கதாநாயகன் சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது ஒரு கார் விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கதாநாயகன் சரத்குமார் குணமடைந்தாலும் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்படுகிறார்.

அதே சமயம், தொடர்ந்து கொலைகள் செய்த கொண்டிருக்கும் சைக்கோ கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் கதாநாயகன் சரத்குமார், அது என்ன தொடர்பு? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடுகிறார்.

தன்னுடைய பழைய நினைவுகளை இழந்துக் கொண்டிருப்பதோடு, மட்டுமல்லாமல் ஞாபக மறதியால் அவதிப்படும் கதாநாயகன் சரத்குமார் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, சைக்கோ கொலையாளிக்கும் கதாநாயகன் சரத்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் இந்த தி ‘ஸ்மைல் மேன்’ திரைப்படத்தின் கதை.

இந்த ‘தி ஸ்மைல் மேன்’ திரைப்படத்தின் கதாநாயகனாக சரத்குமார் நடித்திருக்கிறார்.

சிதம்பரம் நெடுமாறன் என்ற சிபிசிஐடி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னால் முடிக்க முடியாமல் போன வழக்கை முடிக்க போராடும் ஒரு சிபிசிஐடி அதிகாரியாக அருமையாக நடித்து திரைப்படத்திற்கு ஒன் மேன் ஆர்மியாக பயணித்திருக்கிறார்.

கதாநாயகன் சரத்குமார் காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் அடிக்கடி வெளியானாலும், அனைத்திலும் ஏதோ ஒரு சிறு மேஜிக்கை காண்பித்து கவர்ந்துவிடுகிறார்.

சிபிசிஐடி குழுவைச் உள்ள அதிகாரிகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, திரைக்கதையின் திருப்பங்களுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

இந்த ‘தி ஸ்மைல்மேன்’ திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக கலையரசன் நடித்திருக்கிறார்.

கொடுத்த கதாபாத்திரத்தை மிரட்டல் ஆகவும் அருமையாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கலையரசன்.

சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன் இனியா,
பேபி ஆழியா, என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கு திரைப்படத்தில் முக்கிய பங்கு இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு மூலம் திரைப்படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது.

தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கில்லர் பின்னணியில் இருக்கும் கதைதான், இதுபோன்ற கதைகள் கிரைம் திரில்லர் திரைப்படங்களின் உயிர்நாடி என்றாலும், அதை சரியான முறையில் கையாள்வதில் கதையாசிரியர் தடுமாறியிருந்தாலும் இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன், சைக்கோ கில்லாடி கொலையாளிக்கும், சரத்குமாருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி, எதிர்பார்க்காத திருப்பங்களுடன் திரைக்கதையை சுவாரஸ்யமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷயாம் – -பிரவீன்.

மொத்தத்தில் – தி ‘ஸ்மைல் மேன்’ திரைப்படம் பயம் காட்டவில்லை