பிளடி பெக்கர் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுராபந்துலா, மெரின் பிலிப், ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ.சர்வவன்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவபாலன் முத்துக்குமார்.

ஒளிப்பதிவாளர் :- சுஜித் சாரங்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.நிர்மல்.

இசையமைப்பாளர் :- ஜென் மார்ட்டின்.

தயாரிப்பு நிறுவனம் :- ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

ரேட்டிங் :- 2.5./5.

ஒரு நாள் பார்வை இல்லாமலும், ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோர் போல் நடித்து பிச்சை எடுக்கும் கதாநாயகன் கவின் சிறுவயதில் இருந்து ஒரு பிச்சைக்காரனாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமூகத்தில் பெரிய அரண்மனையில் செல்வாக்கில் உள்ள ஒருவர் இறந்துவிட அவரின் நினைவு நாள் அன்று ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு அந்த அரண்மனையில் விருந்தளிக்கும் விழா ஏற்பாடு செய்கின்றனர்.

அப்பொழுது அந்த ஏழை எளிய ஆதரவற்ற மக்களில் ஒருவராக கதாநாயகன் கவின் அந்த விருந்து அளிக்கும் விழாவில் கலந்துக்கொள்ள அந்த அரண்மனையில் நுழைகிறார்.

சிறுவயதில் இருந்து அந்த அரண்மனையில் கதாநாயகன் கவினுக்கு அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்ற நீண்ட நாளாக ஆசை இருக்கிறது.

இந்த விருந்து விழாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அந்த அரண்மனையில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் கதாநாயகன் கவின் அரண்மனைக்குள் நுழைகிறார்.

அந்த விருந்து விழா நடக்கும் அரண்மனைக்குள் நுழைந்தப்பின் கதாநாயகன் கவின் மிகப்பெரிய அளவில்சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் அந்த சிக்கலால் கதாநாயகன் கவினின் உயிருக்கு மிகப்பெரிய அளவில் ஆபத்து ஏற்படுகிறது.

அந்த அரண்மனைக்குள் மிகப்பெரிய அளவில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது

அரண்மனையில்? கதாநாயகன் கவின் சிக்கலில் இருந்து தப்பித்தாரா,? தப்பிக்கவில்லையா,?

அந்த அரண்மனையில் இருந்து கதாநாயகன் கவின் உயிருடன் வெளிவந்தாரா? வெளி வரவில்லையா,? என்பதுதான் இந்த பிடி பெக்கர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பிளடி பெக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கவின் பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் அளவில் தனது நடிப்பின் மூலம் பிளடி பெக்கராகவே அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் கவின் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை காட்சிகள் நிறைய இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது.

ஆனால் திரைப்படத்தின் ஹேப்பி என்டிங்காக முடிக்கவேண்டும் என சேர்க்கப்பட்டுள்ள ராதாரவி காட்சிகள் நன்றாகவே இருந்தாலும், அது தேவையில்லாத காட்சிகளாகத்தான் ரசிகர்களுக்கு தோன்றுகின்றது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மாருதி பிரகாஷ்ராஜ், சுனில், கார்த்திக் அக்‌ஷயா ஹரிஹரன் அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சுஜித் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அரண்மனைக்குள் நடக்க ஒளிப்பதிவு மூலம் இதை மிகவும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்மாயமே என்ற பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்திருக்கிறது.

ஒரு பிச்சைக்காரன் பணக்காரன் வாழும் அரண்மனையில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற கற்பனை கதையை நகைச்சுவையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவபாலன் முத்துகுமார்.

நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் திரைப்படத்தில் பல இடங்களில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

திரைப்படம் தொடங்கி இருபது நிமிடங்களிலே அரண்மனைக்குள் கதாநாயகன் கவின் நுழைந்த பின்பு திரைப்படம் இறுதிவரை கதை மாளிகைக்குள்ளே நடக்கிறது என்பதால் இது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. .

இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் திரைப்படம் கூடுதல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டிருக்கும்.

மொத்தத்தில், – இந்த பிளடி பெக்கர் திரைப்படம் நம்மை ஏமாற்றவும் இல்லை, அதீத பாராட்டையும் பெறவில்லை.

error: Content is protected !!