ராக்கெட் டிரைவர் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.
ஒளிப்பதிவாளர் :- ரெஜிமெல் சூர்யா தாமஸ்.
படத்தொகுப்பாளர் :- இனியவன் பாண்டியன்.
இசையமைப்பாளர் :- கௌஷிக் க்ரிஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டோரீஸ் பய் தி ஷோர்.
தயாரிப்பாளர் :- அனிருத் வல்லப்.
ரேட்டிங் :- 2.5./5.
விஞ்ஞானியாக வேண்டும் என விரும்பும் கதாநாயகன் விஷ்வத்தின் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவருடைய கனவை தகர்த்துவிடுகிறது.
ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கும் கதாநாயகன் விஷ்வத்தின் மீது போக்குவரத்து பெண் காவலரான கதாநாயகி சுனைனா மிகப்பெரிய அளவில் அவர் அக்கறை காட்டுகிறார்.
தன் ஆசைப்பட்ட விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனதால் எப்போதும் ஏதோ பதில் கொடுத்ததே போல சலிப்பான மனநிலையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் விஷ்வத்தின் ஆட்டோவில் ஒரு நாள், 16 வயதில் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பயணம் மேற்கொள்கிறார்.
1948ஆம் ஆண்டில் இருந்து தற்போது நடக்கும் நிகழ்காலத்துக்கு டைம் டிராவல் மூலம் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நமது ஆட்டோவில் பயணிப்பதை கதாநாயகன் விஷ்வத் அறிந்து கொள்கிறார்.
அதே சமயம், 1948ஆம் ஆண்டில் இருந்து தற்போது நடக்கும் காலக்கட்டத்திற்கு வந்ததற்கான நோக்கம் என்ன என்பதே தெரியாமல் 16 வயது ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தற்போது நடக்கும் காலக்கட்டத்திற்கு வந்ததற்கான நோக்கம் என்ன?
ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நோக்கம் என்ன என்பதை அறிந்து அதை நிறைவேற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் கதாநாயகன் விஷ்வத், ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமுடன் இணைந்து எதை கண்டுபிடிக்க வந்தாரோ அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபடுகிறார்கள்.
அந்த நோக்கம் என்ன?, அதை கதாவிஷ்வத் எப்படி கண்டுபிடித்தார்களா?, கண்டுபிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராக்கெட் டிரைவர் திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்வத் நடித்துள்ளார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஷ்வத், பிரபா என்ற கதாபாத்திரத்தில் அலட்டிக் கொள்ளாமல் ஆரவாரம் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் விஷ்வத் மீது அக்கறை காட்டும் தோழியாக நடித்திருக்கும் சுனைனாவுக்கு திரைக்கதையோடு பயணிக்க கூடிய கதாப்பாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
சிறுவயது ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமாக நடித்திருக்கும் நாகவிஷால் மற்றும் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நண்பராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி இருவரும் மிகச் சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் பதிகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், அருமையான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
ஃபேண்டஸி டிராமா வகையில் உள்ள திரைபபடங்கள் என்றாலே பிரமாண்டமும், திருப்பங்களும் நிறைந்தவையாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்,
இந்த திரைப்படத்தில் அருமையான கருத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
மொத்தத்தில், ‘ராக்கெட் டிரைவர்’ இனிமையான பயணம்.











