‘தீயவர் குலை நடுங்க’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு Nkps,  ராம்குமார்,  தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல்,  பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன்,  O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தினேஷ் இலெட்சுமணன்.

ஒளிப்பதிவாளர் :- சரவணன் அபிமன்யு.

படத்தொகுப்பாளர் :- லாரன்ஸ் கிஷோர்.

இசையமைப்பாளர் :- பரத் ஆசிவகன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஜி. எஸ். ஆர்ட்ஸ்.

தயாரிப்பாளர் :-  ஜி. அருள்குமார்.

ரேட்டிங் :- 2.5/5.

நெடுஞ்சாலையில் பிரபல எழுத்தாளர் ஒருவர் காரை  ஓட்டிக்கொண்டு சமயத்தில் முகமூடி அணிந்த மர்ம நபரால் அந்தக் காரை விபத்து ஏற்படுத்தி  கொடூரமாக முறையில் அந்த எழுத்தாளரை கொலை செய்யப்படுகிறார்.

நெடுஞ்சாலையில் நடந்த பிரபல எழுத்தாளரின் கொலை வழக்கை காவல்துறை ஆய்வாளரான  கதாநாயகன் அர்ஜூன் கொலையை பற்றி விசாரிக்க தொடங்குகிறார்.

கொலை வழக்கு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் மிகவும் நெருக்கமாக பழக தொடங்குகிறார்.

இதற்கிடையே, காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவத்திற்கும் எழுத்தாளரின்  கொலை வழக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் நிலையில், அது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் மிகப்பெரிய தொழில் அதிபரான ராம்குமார் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.

எழுத்தாளர் மற்றும் தொழிலதிபர் ராம்குமார் இவர்களை கொலை செய்த மர்ம நபர் யார்? தொடர் கொலைகளை செய்து கொண்டிருக்கும் மரபணு வரை காவல்துறை ஆய்வாளரான அர்ஜுன் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?  என்பதுதான் இந்த ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் திரைப்படத்தில் மிளிர்கிறார்.

காவல்துறை சீருடை அணியாமல் வலம் வந்தாலும், தனது கம்பீரமான நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்த ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

ஆட்டிசம் பாதித்த சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

பிரவீன் ராஜா, லோகு,  என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக அடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதை திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

உண்மை சம்பவம் ஒன்றை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லக்‌ஷ்மணன்.

மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் குலை நடுங்க வில்லை.

error: Content is protected !!