‘இரவின் விழிகள்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- மகேந்திர கர்ணா, நீமா ரேய் ரேஷ்மா, நிழல்கள் ரவி ரகுபதி, சிக்கல் ராஜேஷ் கருப்பு, கத்தரிக்கோல் மனோகர்,  மாரிமுத்து, சரண் ராஜ் ரங்க ராஜ், ஆன்சி சிந்து கயல், அஷ்மிதா அஷ்மிதா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிக்கல் ராஜேஷ்.

ஒளிப்பதிவாளர் :- பாஸ்கர்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.ராமர்.

இசையமைப்பாளர் :- ஏ.எம்.ஏசர்.

தயாரிப்பு நிறுவனம் :- மகேந்திரா பொலிரோ ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- பி.மகேந்திரன்.

ரேட்டிங் 2.5./5.

இன்ஸ்டாகிராம் முகநூல், யூடியுப், மற்றும் அனைத்து சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களில் பலர், தங்களது சுய லாபத்திற்காகவும் தங்கள் பிரபலத்திற்காகவும்,  தங்களுடைய குடும்ப  வருமானத்திற்காகவும்,  தங்களின் அனைத்து சமூக வலைதளங்களில், சில எல்லை மீறிய செயல்களால் எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவர் தன்னுடைய கோபத்தால் ஒவ்வொருவராக தேடித்தேடி ஒருவர் கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் இருக்கும் பிரபலங்களை தேடி தேடி கொலை செய்யும் கொலையாளி யார்?, எதற்காக சமூக வளங்களில் உள்ள  பிரபலங்களை கொலை  செய்கிறார்?, என்பதுதான் இந்த  ‘இரவின் விழிகள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த இரவின் விழிகள் திரைப்படத்தில் கதாநாயகனாக மகேந்திர கர்ணா,  நடித்திருக்கிறார்.

கர்ணா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் மஹேந்திரன், அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். 

இந்த இரவின் விழிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நீமா ரேய் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்தி குறையின்றி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த இரவின் விழிகள் திரைப்படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எந்தவிதமான குறையும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து  திரைக்கதைக்கு அவருடைய நடிப்பு மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது.

நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் பளிச்சென்று திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும்  பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தற்போதைய ஜோடிகள் சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருக்கும் இந்த நிலையில் அத்துமீறிய செயல்களை, கண்டிக்கும் விதத்தில் அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.

மொத்தத்தில், ‘இரவின் விழிகள்’  தற்போது உள்ள சோசியல் மீடியா மோகத் மோகத்தில் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!