விருந்து திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- னஅர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர், ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தாமர கண்ணன்.

ஒளிப்பதிவாளர் :- ரவிச்சந்திரன், பிரதீப் நாயர்.

படத்தொகுப்பாளர் :- வி.டி.ஸ்ரீஜித்.

இசையமைப்பாளர்கள் :- ரதீஷ் வேகா , சனந்த் ஜார்ஜ் கிரேஸ்,

தயாரிப்பு நிறுவனம் :- நெய்யர் ஃபிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- கிரீஷ் நெய்யர்.

ரேட்டிங் :- 3.25/5

கதாநாயகி நிக்கி கல்ராணியின் தந்தை முகேஷ் மிகப்பெரிய பெரிய தொழில் அதிபராக இருக்கும் இவருக்கு தொழிலில் நஷ்டத்தில் இருந்து மீளும் நிலையில் மர்மமான முறையில் இருந்து விடுகிறார்.

தொழிலதிபர் முகேஷ் மர்மமான மரணத்தை காவல்துறை அதிகாரிகள் கொலையாக தான் இருக்கும் என விசாரித்து வருகிறது.

சில நாட்கள் பிறகு தொழிலதிபர் முகேஷ் மனைவியுமான கதாநாயகி நிக்கி கல்ராணியின் தாயும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.

அதன் பின்னர் ஒரு மர்ம கும்பல் ஒன்று கதாநாயகி நிக்கி கல்ராணியை கொலை செய்வதற்காக துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மர்ம கும்பலிடம் இருந்து கதாநாயகி நிக்கி கல்ராணியை காப்பாற்றி தன் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கிறார் அர்ஜூன்.

ஒரு கட்டத்தில் கதாநாயகி நிக்கி கல்ராணி, தன்னை காப்பாற்றிய அர்ஜூன்தான் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்திருப்பார் என நினைத்து அர்ஜுனை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகி நிக்கி கல்ராணியை துரத்தும் மர்ம கும்பல் யார்? எதற்காக கதாநாயகி நிக்கி கல்ராணியை துரத்துகிறார்கள்? அர்ஜூன் யார்? கதாநாயகி நிக்கி கல்ராணி, அர்ஜூனை எதற்காக கொலை செய்ய நினைக்கிறார்? என்பதுதான் இந்த விருந்து திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விருந்து திரைப்படத்தில் கதாநாயகனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்திருக்கிறார்.

அனல் பறக்கும் ஆக்சன் ஆக்ஷன் காட்சிகள், கொலையின் பின்னணியில் இருப்பது யார் என தேடுதல் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகியாக இந்த விருந்து திரைப்படத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகி நிக்கி கல்ராணி உடன் பயணிக்கும் கிரிஷ் நெய்யர் எதார்த்த நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு மூலம் கவனம் பெற்று இருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் இசையில் ஒரு பாடல் கேட்கும் விதத்திலும், பின்னணி இசை மிரட்டலாகவும் அருமையாகவும் அமைந்துள்ளது.

முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும். இரண்டாம் பாதி திரைக்கதை வேறு எங்கோ சென்று விடுகிறது.

குறிப்பாக கிளைமாக்ஸ் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன.

அடுத்தடுத்து கொலைகள், இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என திரைப்படத்தை மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்  தாமர கண்ணன்.

மொத்தத்தில் இந்த விருந்து திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.