நடிகர் அஜித்குமார் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு!!

சென்னை 31 அக்டோபர் 20௨2 நடிகர் அஜித்குமார் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு!!

துணிவு’ திரைப்படம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையால் சமூக வலைத்தலங்களில் பரபரப்பாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித்குமார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் போனிகபூர் அஜித்குமார் கூட்டணியில் ‘துணிவு’ மூன்றாவது திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்த ந
துணிவு திரைப்படத்தின் மூலம் மஞ்சுவாரியார் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார்.

இந்தத் துணிவு திரைப்படத்தில் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் கவின் பகவதி பெருமாள் வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த துணிவு திரைப்படத்தின் தமிழகத்தில் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றி உள்ளது.

சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் ‘துணிவு’ திரைப்படம் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது

இதில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ” ஒரு நல்ல திரைப்படமே அந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்” என்று குறிப்பிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா. இதன் மூலம் அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வருகிறது.

இதன் மூலம் துணிவு திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ப்ரமோஷனில் கலந்து கொள்வதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என உறுதி செய்துள்ளார்.