’உருட்டு உருட்டு’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கஜேஷ் நாகேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பத்ம ராஜு ஜெய்சங்கர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாஸ்கர் சதாசிவம்.
ஒளிப்பதிவாளர் :- பாஸ்கர் சதாசிவம், யுவராஜ் பால்ராஜ்.
படத்தொகுப்பாளர் :- திருச்செல்வம்.
இசையமைப்பாளர் :- அருணகிரி,
கார்த்திக் கிருஷ்ணன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- பத்ம ராஜு ஜெய்சங்கர்.
ரேட்டிங் 2.25./5.
நேரம் காலம் தெரியாமல் குடித்துக்கொண்டு வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் கதாநாயகன் கஜேஷ் நாகேஷை கதாநாயகி ரித்விகா ஸ்ரேயா காதலிக்க ஆசைப்படுகிறார்.
ஆனால், கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் போதை இறங்க… இறங்க குடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
ஆனால் கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் என்னதான் எதிரில் எவ்வளவு அழகான ஒரு பெண் இருந்தாலும் அவருக்கு மது மட்டுமே அழகாக தெரிய கதாநாயகி ரித்விகா ஸ்ரேயா எப்படியாவது தன்னுடைய அழகினால் வசீகரிக்க பல முயற்சிகள் செய்தும், கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் பெண்களை விட மது போதை மீது காதல் கொண்டவராக இருக்கிறார்.
கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் எப்படியாவது திருத்தியாக வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் கதாநாயகி ரித்விகா ஸ்ரேயா, திருத்தவே முடியாமல் போகிறது.
இறுதியில் கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் குடியிலிருந்து விடுபட்டாரா? குடியிலிருந்து விடுப்படவில்லையா?
கதாநாயகன் கஜேஷ் நாகேஷ் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட வைத்து கதாநாயகி ரித்விகா ஸ்ரேயா, காதலித்தாரா? காதலிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘உருட்டு உருட்டு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த உருட்டு உருட்டு திரைப்படத்தில் கதாநாயகனாக கஜேஷ் நாகேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குடி தேவையில்லை என்ற என்னத்தில் இருப்பவர்களை கூட, ஒரு கட்டிங் போட வைத்துவிடும் அளவிற்கு ரொம்ப இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த உருட்டு உருட்டு திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான கமர்ஷியல் கதாநாயகிகள் போல், மிகவும் அழகாக வந்து பாடல், நடனம் என்று கலர்புல்லாக வலம் வந்து மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமியாக திரைப்படத்தில் கதா பத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் மூன்று பொண்டாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர், எந்தவித பாகுபாடு இன்றி மொட்டை ராஜேந்திரனையும், திரைப்படம பார்க்கும் பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.
கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், ஆரம்பத்தில் அதிரடியான வில்லனாக எண்ட்ரி கொடுத்தாலும், அதன் பிறகு அமைதியாக வலம் வந்து கதையில் மறைந்து விடுகிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேரன் ராஜ், காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையை எந்த ஒரு குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், ஒளிப்பதிவு மூலம் பாடல் காட்சிகளை அனைத்தும் கலர்புல்லாக திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.
இசையமைப்பாளர் கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை பரவாயில்லை சுமாராக இருக்கிறது.
தற்போதைய தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் போதை பழக்கத்தினால் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு சிரிக்கும்படியான காமெடி ஜானரில் சொல்லியிருந்தாலும், எதிர்பார்க்காத இறுதி காட்சியில் குடிமகன்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சி கொடுத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.
மொத்தத்தில், ‘உருட்டு உருட்டு’ திரைப்படம் பார்த்து குடிகாரர்கள் அனைவரும் திருந்த வேண்டும்.











