நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5 / 5.

நடிகர் நடிகைகள் :- வடிவேலு, ஆனந்தராஜ், வேல ராமமூர்த்தி, முனிஷ்காந்த், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, பிரசாந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிராஜ்.

ஒளிப்பதிவு :- விக்னேஷ் வாசு.

படத்தொகுப்பு :- செல்வா ஆர்.கே.

இசை :- சந்தோஷ் நாராயணன்.

தயாரிப்பு :-  லைக்கா புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர் :- சுபாஷ்கரன்.

ரேட்டிங் :- 2.5 / 5

தமிழ் திரைப்பட உலகில் ஒரு காலத்தில் முன்னணி மிகப்பெரிய பிசியான காமெடி நடிகராக இருந்தவர் வைகை புயல் வடிவேலு.

அப்போதே நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்ற முடிவையும் எடுத்தார்.

இவர் இதுவரை கதாநாயகனாக நடித்து வெளிவந்த நான்கைந்து திரைப்படங்களில் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ லிரைப்படத்தைத் தவிர வேறு எந்த திரைப்படமும் ரசிக்கும் படியாக இல்லை.

அந்த வரிசையில் இந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படமும் சேர்ந்து விட்டது.

வேலராமமூர்த்தி தம்பதிக்கு திருமணம் அகி பல வருடங்களாக ஆகியும் குழந்தை இல்லாததால் பைரவர் திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு முனிவர் ஒருவரை சந்திந்திக்க அந்த முனிவர் வேல ராமமூர்த்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

இனி உங்களுக்கு நல்ல காலம் தான் என்று முனிவர் கூறிவிட்டுச் செல்கிறார்.

அந்த நாய் வந்த நேரம் முதல் அந்த குடும்பத்திற்கு குழந்தையும் பிறக்கிறது.

வேல ராமமுர்த்நிக்கு பேங்க் லோன் கிடைத்து நல்ல நேரம் தொடங்குகிறது.

அநத நாய்க்குட்டியை பார்த்துக் கொள்வதற்கு ஒரு நல்ல வேலைக்காரனை பணியில் அமர்த்துகிறார்.

ஒருநாள் நாய்க்குட்டி பார்த்துக் கொள்ளும் வேலைக்காரன் அந்த நாயை தூக்கிக் கொண்டு சென்று விட, இவர்கள் குடும்பமே ஏழ்மையான நிலைக்கு வந்து விடுகிறது.

வருடங்கள் பல உருண்டோட கதாநாயகன் வடிவேலு ஒரு கும்பலை வைத்துக் கொண்டு பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களை திருடி சென்று அதில் பணம் பார்த்து வாழ்ந்து வருகிறார்.

உள்ளூரில் மிகப்பெரும் தாதாவான ஆனந்தராஜின் நாயை எதிர்பாராதவிதமாக வடிவேலு கடத்திவிடுகிறார்.

தன் நாயை கடத்திய கதாநாயகன் வடிவேலுவை தாதான ஆனந்த் ராஜ் மிரட்டுகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் கதாநாயகன் வடிவேலு தங்கள் குடும்பத்தில் ஒரு நாய் இருந்ததாகவும் அந்த நாய் அதிர்ஷ்டமானது என அதன் மூலம் தங்கள் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருந்ததாகவும் அந்த நாய் காணாமல் போய்விட்டதாகவும் தன் பாட்டி மூலம் தெரிந்து கொண்டு அதை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில் தாதாவான ஆனந்த் ராஜின் சிக்கலில் இருந்து கதாநாயகன் வடிவேலு தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா ? தனக்கு சொந்தமான அதிர்ஷ்டமான நாயை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு கதாநாயகமாக நடித்திருக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படம் உலகில் கதாநாயகனாக மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.

தன் வழக்கமான உடல் மொழியாலும் திரைப்படம் முழுவதும் சிரிப்பை வாரி வழங்கவில்லை.

ஆனந்த் ராஜ், முனிஷ்காந்த், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி பிரசாந்த் என அனைத்து கதாபாத்திரங்களும் எற்ற நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனந்தராஜ் அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை திரைப்படத்தை மேலும் ஜாலியாக நகர்த்தியுள்ளது.

இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்துள்ளது.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நாய்களை கடத்தி பணக்காரனாக நினைக்கும் கதாநாயகன் என்ற ஒரு சாதாரண கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து திரைப்படம் முழுவதும் காமெடி கொஞ்சமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுராஜ்.

யானைக்கு சோள பொறி கொடுத்தது போல வடிவேலுவின் திறமைகளை கம்மியாக பயன் படுத்தியுள்ளார் இயக்குனர் சுராஜ்.

காமெடி திரைப்படத்தை மிகவும் சீரியசாக பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் சுராஜ்.

மொத்தத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் காமெடி புஸ்வானம்.