வீரன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25./5.
நடிகர் & நடிகைகள் :- ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், மதுரை மோகன், சின்னி ஜெயந்த், போஸ் வெங்கட், ஜீவா ரவி, சாஸ்ஸி செல்வராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஏ.ஆர்.கே. சரவணன்.
ஒளிப்பதிவு :- தீபக் டி மேனன்.
படத்தொகுப்பு :- பிரசன்னா ஜிகே.
இசை :- ஹிப்ஹாப் தமிழா ஆதி.
தயாரிப்பு நிறுவனம் :- சத்ய ஜோதி பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- டி ஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்,
ரேட்டிங் :- 3.25./ 5.
வீரனூர் என்ற சிறிய கிராமத்தில் சிறு வயதில் ஆதி அவருடைய நண்பன் மற்றும் அதிரா மூவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்
ஒரு நாள் சிறு வயதில் ஆதி மற்றும் ஆதியின் நண்பன் மற்றும் அதிரா பளிளிக்கு செல்லும் வழியில் கதாநாயகன் ஆதியை மின்னல் தாக்கி சுயநினைவை இழக்கிறார்.
அந்த கிராமத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கதாநாயகன் ஆதியை அவரது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு கதாநாயகன் ஆதியை உடல் நிலை குணமடைவதோடு, அவரது உடலில் மின்னல் சக்தி உருவாகிறது.
அந்த சக்தியை வைத்து அடுத்தவர்களின் மூளையை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கதாநாயகன் ஆதி தெரிந்து கொள்கிறான்.
தனது வீரனூர் கிராமத்தில் எலக்ட்ரானிக் குழாய்கள் அமைத்து தனது கிராமம் வெடித்து சிதறுவது போன்று கதாநாயகன் ஆதி கனவு காண்கிறார்.
வீரனூர் கிராமத்தில் எலக்ட்ரானிக் குழாய் அமைப்பதற்காக வீரன் கோவில் இருக்கும் இடத்தை அழிக்க சிலர் முயற்சி எடுப்பது கதாநாயகன் ஆதி தெரிய வருகிறது.
உடனடியாக சிங்கப்பூரில் இருந்து வீரனூர் கிராமத்துக்கு கதாநாயகன் ஆதி வருகிறார்.
விஞ்ஞானி வில்லன் வினய், வீரனூர் கிராமத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கரமான திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் விஷயம் கதாநாயகன் ஆதிக்கு தெரிய வருகிறது.
வர இருக்கும் ஆபத்து பற்றி சொன்னாலும் புரிந்துக் கொள்ளாத மக்களை காப்பாற்றும் முயற்சியில் களம் இறங்கும் கதாநாயகன் ஆதி.
இதனால் கிராமத்தில் இருக்கும் மக்களை திரட்டியும், தனக்கு கிடைத்த சக்தியை வைத்தும் இதனை முறியடிக்க நினைக்கிறார்.
கிராமத்துக்கு ஏற்படும் பயங்கரமான ஆபத்தை முறியடிக்க இறங்கும் இந்த முயற்சியில் கதாநாயகன் ஆதி வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? வீரன் கோவிலை இடிக்க நினைத்தவர்களின் முயற்சியை கதாநாயகன் ஆதி முறியடித்தாரா? முறியடிக்க வில்லையா? என்பதுதான் இந்த வீரன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வீரன் திரைப்படத்தில் சூப்பர் கதாநாயகனாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கிறார்
சூப்பர் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி அவருடைய நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.
கதாநாயகன் ஆதி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார்.
கதாநாயகன் ஆதி நடித்த அத்தனை திரைப்படங்களில் இருந்து புது விதமாக நடிப்பு தென்படுகிறது.
இந்த வீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார்.
கதாநாயகி அதிரா ராஜ் திரையில் மிளிர்கிறார்.
காதல் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் வினய் மிகவும் வித்யாசமான நடிப்பை கொடுத்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் இருவரின் காம்பினேஷன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
இந்த வீரன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்கலும் அவர்களின் பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனனின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் சூப்பர்.
சூப்பர் ஹீரோ ஃபண்டசி திரைப்படமாக கொடுத்து அனைத்து திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் ஏஆர்கே சரவணன்.
சொல்ல வந்த விஷயத்தை திரைப்படத்தை விட்டு விலகாமல் திரைக்கதையின் மூலம் இயக்குனர் ஏஆர்கே சரவணன் மெருகேற்றியுள்ளார்.
மொத்தத்தில் வீரன் – திரைப்படம் வித்தியாசமான சூப்பர் ஹீரோ.











